Baakiyalakshmi Suchithra : ”நான் விருது வாங்குறதை பாக்க அம்மா இல்லையே..” : கண்ணீர்விட்ட பாக்கியலஷ்மி சுசித்ரா

பாக்கியலட்சுமி தொடரின் ஹீரோயின் சுசித்ரா, தான் விஜய் டி.வி. விருது வாங்கியதை பார்க்க தனது அம்மா இல்லையே என்று மேடையிலே கண்கலங்கியுள்ளார்.

Continues below advertisement

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மிகவும் பிரபலமான தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்த தொடரில் நாயகியாக அதாவது பாக்கியலட்சுமியாக நடித்து வருபவர் நடிகை சுசித்ரா. இவருக்கு என்று ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் சின்னத்திரை விருது வழங்கும் விழா நடைபெற்றது.

Continues below advertisement

இந்த விழாவில் பேவரைட் நாயகி என்ற விருது சுசித்ராவிற்கு வழங்கப்பட்டது. விழாவை வென்று கண்கலங்கிய நாயகி சுசித்ரா மேடையில் உருக்கமாக பேசினார். அவர் அந்த நிகழ்ச்சியில் பேசியதாவது, “தமிழ் மக்களுக்கு நன்றி. நாம் உழைத்துக்கொண்டே இருந்தால் சரியான அங்கீகாரம் கிடைக்கும் என எனது அம்மா கூறுவார்கள். அம்மா சொன்னதுபோல இப்போது இந்த விருது கிடைத்துள்ளது. ஆனால், இதைப் பார்க்க எனது அம்மா இல்லை” என்று மேடையிலே பேசி கண்கலங்கினார். அதைப் பார்த்த ரசிகர்களும், சக நடிகர்களும் கண்கலங்கினர்.


சுசித்ராவின் முழுப்பெயர் சுசித்ரா ஷெட்டி ஆகும். இவருக்கு தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகள் சரளமாக தெரியும். அவர் தமிழ் மட்டுமின்றி பிற மொழிகளிலும் சீரியல்களில் நடித்துள்ளார். தமிழில் பாக்கியலட்சுமி தொடரில் ஒரு நடுத்தர குடும்பத்தலைவியாக நடித்து அசத்தி வருகிறார்.

தற்போது பாக்கியலட்சுமி தொடரின் நாயகன் கோபி தனது கள்ளக்காதலி ராதிகாவின் மேல் கொண்ட மோகத்தால் மனைவி பாக்கியலட்சுமிக்கு தொடர்ந்து துரோகம் செய்து வருவது போல திரைக்கதை நகர்ந்து வருகிறது. இதனால், கோபி மீது ரசிகர்கள் மிகுந்த அதிருப்தியிலும், கோபத்திலும் உள்ளனர் மேலும், சீரியல் என்பதையும் கடந்து பாக்கியாவிற்கு ஆதரவாக மீம்ஸ்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.


விரைவில் கோபி தன்னுடைய தவறுக்காக தண்டனையை அனுபவிப்பதுபோல தொடர் விரைவில் சுவாரஸ்யமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாக்கியலட்சுமி தொடர்தான் விஜய் தொலைக்காட்சியின் நம்பர் 1 சீரியலாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola