விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் தனித்தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, ராஜா ராணி 2 போன்ற சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விதமாக பாக்யலெட்சுமி சீரியல் கதைக்களம் நகர்ந்துவருகிறது. அப்பாவியான குணத்தைக்கொண்ட பாக்யாவாக நடிகை சுதித்ராவும், ஏமாற்றும் கணவர் ரோலில் நடிகர் சுதிசும் நடித்து வருகின்றனர். கணவர் என்ன சொன்னாலும் தட்டாமல் கேட்கும் மனைவி பாக்யலட்சுமி, இதனால் மிகுந்த அவமானங்களைச் சந்திக்கிறார். இந்நிலையில் தான் வாழ்க்கையில் எப்படியாவது தனது சொந்த உழைப்பில் முன்னேற வேண்டும் என்ற முனைப்போடு கேட்டரிங் தொழில் மேற்கொண்டு வந்தார். 


அந்நேரத்தில், ராதிகா ஒரு சமையல் ஆர்டரை பாக்யாவிடம் கொடுக்க, அதை குறித்த நேரத்தில் சமைத்தும் கொடுக்கிறார் பாக்யா. ஒரு அனாதை இல்லத்தில் ராதிகாவும், கோபியும் இணைந்து அந்த உணவுகளை குழந்தைகளுக்கு பரிமாறுகின்றனர். பாக்யா சமைத்த உணவினை சாப்பிட்ட குழந்தைகள் சிறிது நேரத்தில் மயக்கம் அடைந்துவிட, சிறிது நேரத்தில் இதன் காரணமாக காவல்துறையினர் பாக்யாவை செய்கின்றனர். 


தொடர்ந்து, எழில் மற்றும் செழியன் முயற்சியால் பாக்யா வெளியேவர, மனைவிக்கு ஆதரவாக இல்லாமல் கோபி தனது மனைவி பாக்யாவிடம் கோவத்தை வெளிபடுத்துகிறார். நீ இனிமேல் சமையல் தொழிலை செய்யக்கூடாது என தெரிவித்து வீட்டைவிட்டு வெளியேறி விடுகிறார். 


இன்றைய ப்ரோமோ : 


இன்றைய ப்ரோமோ தொடக்கத்தில் ராதிகா மற்றும் பாக்யா ஒரு கோவிலில் சந்திக்கின்றனர். அப்பொழுது, ராதிகா பாக்யாவிடம் "உங்க வீட்ல எதுவும் பிரச்சனை இல்லையே" என்று கேள்வி கேட்கிறார். அதற்கு பாக்யா "இனியா அப்பா என் பிஸ்னஸ ஸ்டாப் பண்ண சொல்லிட்டாரு"ன்னு சொல்ல ராதிகா இதைகேட்டு அதிர்ச்சியடைகிறார். 


நேராக வீட்டுக்கு சென்ற ராதிகா கோபியிடம், டீச்சர் அவங்க பிஸ்னஸ் ஸ்டாப் பண்ணா நான் ரொம்ப கஷ்டப்படுவேன். அதனால நம்ம ரெண்டு பேரும் டீச்சர் வீட்டுக்கு போய் அவங்க ஹஸ்பண்ட்கிட்ட பேசலாமா..? என்று கேட்கிறார். இதைகேட்டு விரக்தியான கோபி, அது அவங்க குடும்ப விஷயம் அதுல நம்ம எப்படி தலையிட முடியும் என்று கேட்க, அப்போது ராதிகா, இப்ப நீங்க வரபோறீங்களா இல்லையா என்று கோபியிடம் சண்டையிடுகிறார். 



கோபி அந்த நேரத்தில், இப்ப என்ன டீச்சர் பிஸ்னஸ் பண்ணனும் அவ்வளவுதான. நீ இங்கையே இரு. நான் போய் பேசிட்டு வரேன் என்று தனது வீட்டிற்கு சென்று அனைவரது முன்பும் பாக்யாவை சந்திக்கிறார். "யோசிச்சு பார்த்தேன். நீ மறுபடியும் பிஸ்னஸ் ஸ்டார்ட் பண்ணிக்கோ என்று கோபி தெரிவித்ததும் ப்ரோமோ முடிவடைகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண