விஜய் டிவி ரசிகர்களின் அபிமான சீரியலான பாக்கியலட்சுமி சீரியல் நேற்றைய எபிசோடில் பாக்கியா தன்னுடைய டீமுடன் பாண்டிச்சேரியில் கல்யாணம் நடக்க இருக்கும் ரெசார்ட்டுக்கு வந்து சேர்கிறார். பழனிச்சாமி, பாக்கியாவை மணப்பெண்ணின் அப்பாவும் தனது நண்பருமான சுதாகரிடமும் அவரின் குடும்பத்தினரிடமும் அறிமுகம் செய்து வைக்கிறார். சுதாகர் குடும்பம் பாக்கியா நன்றாக சமைத்து விடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகத்துடன் இருக்க, பாக்கியாவுக்கு சப்போர்ட்டாக பேசுகிறார் பழனிசாமி. அதே நேரத்தில் கோபியும் ராதிகாவும் கல்யாணத்துக்காக காரில் வந்து கொண்டு இருந்தார்கள். 



இன்றைய எபிசோடில் கோபி "எனக்கு இந்த கல்யாணம், கூட்டம் இதை எல்லாம் பார்த்தால் அலர்ஜி. நான்கு நாட்களுக்கு முன்னர் தான் எங்கேஜ்மென்ட் ஒன்றுக்கு போனோம் இன்னைக்கு என்னை இங்கே கூட்டிட்டு வர" என சொல்கிறார். "இவங்க என்னுடைய ஃபேமிலி ஃப்ரெண்ட், சின்ன வயசுல இருந்தே பழக்கம் அதனால கண்டிப்பா போகணும்" என்கிறார் ராதிகா. இருவரும் ரெசார்ட்டுக்கு வந்து சேர்க்கிறார்கள். அவர்களின் ரூமுக்கு சென்றதும் ராதிகா கோபியிடம் "வீட்டில் இருந்து தூரமாக வந்த பிறகு நம்ம பிரச்சனையெல்லாம் கூட தூரமா போன மாதிரி ஃபீல் இருக்கு" என்கிறாள் ராதிகா. கோபி ராதிகாவிடம் "இந்த மூன்று நாட்கள் நாம் ஜாலியா என்ஜாய் பண்ணனும்" என்கிறார் அதற்கு ராதிகா "இது போல நீங்க சொன்ன ஒவ்வொரு தடவையும் நம்ம நல்லா அடிவாங்கி இருக்கோம்" என்கிறாள்.


பாக்கியா மிகவும் பதற்றமாக லிஸ்ட்டுடன் வருவதை பார்த்த பழனிச்சாமி "என்ன மேடம் எங்க அவசரமா போறீங்க?" என கேட்கிறார். "இல்ல சார் கொஞ்சம் பொருள் எல்லாம் வாங்க வேண்டியிருக்கு" என்கிறாள். "உங்க முகத்துல ரொம்ப பதட்டம் தெரியுது. எப்ப எல்லாம் நீங்கள் பதட்டமாக இருக்கீங்களோ அந்த சமயத்தில ஓரமா ஒரு இடத்துக்கு போய் மூணு தடவை மூச்சை உள்ளே இழுத்து வெளியே விடுங்க. உங்கள் பதட்டம் குறையும்" என்கிறார். பிறகு பாக்கியா விளக்கேற்றி பூஜை செய்துவிட்டு வேலையை துவங்குகிறார்.


 



பழனிசாமியும் சுதாகரும் பேசிக்கொண்டு இருக்கும் சமயத்தில் கோபி அங்கு வர பழனிசாமியை பார்த்துவிடுகிறார். "இந்த லேம்ப் போஸ்ட் இங்க என்ன பண்ணுது. அது தான் ஆயிரத்து எட்டு பிசினஸ் இருக்கே அத போய் பார்க்க வேண்டியது தானே" என மனசுக்குள் நினைத்து கொள்கிறார். பழனிசாமியும் கோபியை பார்த்து "நீங்களும் இந்த கல்யாணத்துக்கு தான் வந்து இருக்கீங்களா?" என கேட்கிறார். "ஆமா நான் பையன் வீடு சைடு" என சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்கிறார் கோபி. பிறகு மீண்டும் பழனிசாமியும் சுதாகரும் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். 


அத்துடன் இன்றைய எபிசோட் நிறைவுக்கு வருகிறது.