விஜய் டிவி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று டி.ஆர்.பி ரேட்டிங் அதிகமாக உள்ள சீரியலாக ஒளிபரப்பாகி வருகிறது பாக்கியலட்சுமி சீரியல். நேற்றைய எபிசோடில் பாக்கியா ஒரு பக்கம் பாண்டிச்சேரி செல்ல தயாராகும் நிலையில் கோபியும் ராதிகாவும் ஒரு பக்கம் ரெடியாகி விட்டார்கள். 



வீட்டில் உள்ள அனைவரும் பாக்கியாவை வாழ்த்து அனுப்புகிறார்கள். பாக்கியா டீம் பாண்டிச்சேரியில் கல்யாணம் நடக்க இருக்கும் ஹோட்டலுக்கு சென்று இறங்குகிறார்கள். இவ்வளவு பெரிய இடத்திலயா கல்யாணம் நடக்க போகிறது என ஆச்சரியப்படுகிறாள் செல்வி. பழனிசாமியிடம் போன் மூலம் அவர்கள் வந்துவிட்டதை தெரிவிக்கிறார் பாக்கியா. மேனேஜர் இடம் நீங்கள் வருவதை தெரிவித்து விட்டதாகவும் அவர் நீங்கள் தங்க வேண்டிய இடத்திற்கு உங்களை அழைத்து செல்வார் என்றும் கூறுகிறார் பழனிச்சாமி. சிறிது நேரத்தில் மேனேஜர் அங்கு வந்து பாக்கியாவையும் உடன் வந்த மற்றவர்களையும் அவர்கள் தங்க வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்கிறார். 


பழனிச்சாமி தனது நண்பர் சுதாகர் வீடு திருமணத்திற்கு வருகிறார். அனைவரையும் நலம் விசாரித்து பேசி கொண்டு இருக்கும் சமயத்தில் சுதாகரும் அவரது மனைவியும் பாக்யலக்ஷ்மியின் சமையல் பற்றி விசாரிக்கிறார்கள். நீ சொன்னதற்காக தான் நாங்கள் அவரை ஒகே சொன்னோம். பெரிய பெரிய ஆட்கள் எல்லாம் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள். சமையலில் எந்த குறையும் இருக்க கூடாது என்கிறார் சுதாகர் மனைவி. பழனிச்சாமி வரும் விருந்தாளிகள் அனைவரும் கையெடுத்து கும்பிடும் அளவிற்கு சமையல் அருமையாக  இருக்கும்.



நீங்கள் கவலைப்படாதீர்கள் என சொல்லும் சமயத்தில், பாக்கியாவும், செல்வியும் பழனிசாமியை சந்திப்பதற்காக அங்கு வருகிறார்கள். அவர்களை சுதாகரிடம் அறிமுகப்படுத்தி வைக்கிறார் பழனிசாமி. அப்போது சுதாகர் மனைவி பெரிய லிஸ்ட் ஒன்றை பாக்கியாவிடம் கொடுக்கிறார். இதுதான் இன்று நீங்கள் சமைக்க வேண்டிய டிஷ்களின் லிஸ்ட் என்கிறார். கவலையே படாதீங்க சூப்பரா சமைச்சுடுவாங்க என பழனிசாமி சப்போர்ட்டாக பேசுகிறார். 


செல்வி லிஸ்டை பார்த்து என்ன அக்கா இது இவ்வளவு பெரிய லிஸ்ட்டா இருக்கு என்கிறாள். பாக்கியா அதெல்லாம் செய்து விடலாம் என சொல்லி ஆளாளுக்கு வேலையை பிரித்து தருகிறார்.  செல்வியை மேற்பார்வை பார்க்க சொல்கிறார். மறுபக்கம் கோபியும் ராதிகாவும் மிகவும் ஜாலியாக இளையராஜாவின் பாடல்களை கேட்டுக்கொண்டே சிரித்து பேசி கொண்டு வருகிறார்கள். அத்துடன் இன்றைய எபிசோட் முடிவுக்கு வருகிறது.