பாக்கியலெட்சுமி சீரியலில் இந்த வார எபிசோட்டில் கோபி ராதிகா வீட்டில் இருக்கும் போது அங்கு  யதார்த்தமாக பாக்கியாவும் செல்வி அக்காவும் வருவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ளது. இது உண்மைதானா? இல்லை கோபியின் கனவா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு சீரியல்களுக்கும் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதி கண்ணம்மா, மௌனராகம், ராஜா ராணி, பாக்யலெட்சுமி என அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த வரிசையில் கடந்த சில வாரங்களாக என்ன நடக்கப்போகிறது என மக்களை ஆவலுடன் பார்க்க வைத்து வருகிறது பாக்யலெட்சுமி சீரியல். அழகான குடும்பம் அன்பாக குழந்தைகளோடு வாழும் குடும்பத்தலைவி பாக்யலெட்சுமி சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக சுய தொழில் செய்கிறார். எத்தனையோ எதிர்ப்புகள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் பயணிக்கும் பாக்யலெட்சுமிக்கு  தனது வாழ்வில் பெரும் சோதனைதான் தற்போது ஏற்பட்டுவருகிறது.


பாக்யலெட்சுமியின் கணவரான கோபி, தனது கல்லூரி காதலியை திருமணம் செய்துகொள்வதற்காக மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுகிறார்.



ஆனால் பாக்கியலெட்சுமிக்கு தன் கணவர் தன்னை ஏமாற்றுகிறார் என்பதே தெரியாமல் அவருடன் வாழ்ந்துவருகிறார். ஆனால் கோபியின் அப்பா, அம்மா, செல்வி அக்கா,செழியன் ஆகியோர் சந்தேகித்து வருகின்றனர். இருந்தபோதும் எதுவும் நடக்காததுபோல கோபி இருந்துவருகிறார். இதோடு கோபியின் பணப்பிரச்சனையை சரிசெய்ய அவரது கல்லூரி காதலி ராதிகா உதவுகிறார்.


இதனையடுத்து இருவருக்கிடையேயுமான காதல் மேலும் அதிகமாகிறது. இதோடு நீதிமன்றத்திற்கு சென்றுவிட்டோமே எப்படியாவது விவாகரத்து பெற்று திருமணம் நடைபெற்றுவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார் கோபி. ஆனால் ரசிகர்களோ எப்படியாவது நீங்கள் மாட்டியே ஆகணும், ஏன் இயக்குநர் சார் இப்படி பாக்கியலெட்சுமிய கஷ்டப்படுத்துறீங்கள் என பல கமெண்ட்கள் வரும் நிலையில், இந்த வார எபிசோட்டில் கோபி மாட்டுவதுபோன்று முடிவடைகிறது.



கோபி இரவு முழுவதும் வீட்டிற்கு வராமல் ராதிகாவுடனே தங்கிவிடுகிறார். எந்த நேரத்திலும் வந்துவிடுவார் என பாக்யா காத்திருக்கும் நேரத்தில்தான் இதுகுறித்து எழிலிடம் சொல்லி வருத்தப்படுகிறார்.  இந்நிலையில் தான் இரவு ராதிகா வீட்டில் தங்கியிருக்கும் கோபி மாட்டிக்கொள்வது போன்ற காட்சிகள் இடம் பெறுகிறது. அதாவது இரவு முழுவதும் கோபி தனது கல்லூரி காதலியான ராதிகா வீட்டில் தங்கியிருந்த நிலையில், அங்கு யதார்த்தமாக  பாக்யாவும், செல்வி அக்காவும் வருகிறார். அவர்கள் அங்குக காலிங் பெல்லை அடிக்க, அந்தக் கதவை கோபிதான் திறக்கிறார். இந்த காட்சிகள் இன்றைய எபிசோட்டின் முடிவில் வரும் வாரத்தில் என ப்ரோமோவுடன் காட்டப்படுகின்றன.


இந்த காட்சிகள் ஒருவேளை இது கோபியின் கனவாக இருக்கவும் வாய்ப்புண்டு. இல்லை என்றால் வழக்கம் போல் கோபி தகிடுதத்தம் செய்து எஸ்கேப் ஆகவும் வாய்ப்புண்டு. எனவே என்ன நடக்கும் ? என்பது வரும் வாரத்தில்தான் தெரிய வரும். ஆனால் உலகம் அறியாத பாக்கியலெட்சுமியை ஏமாற்றும் கோபி எப்படியாவது  மாட்டிக்கொள்வார் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளனர்.