பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்த நிலையில் அவரின் நடவடிக்கையால் குடும்பத்தினர் சந்தேகமடைந்துள்ளனர்.


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் பேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யா தான் தன் மனைவி என போதையில் கோபி ராதிகாவிடம் உளறியது, கோபியின் மீதான சந்தேகத்தால் அவரது போனை பாக்யா சோதனை செய்தது. ராதிகா - கோபி இடையேயான சண்டை, நடுவில் ராதிகாவின் முதல் கணவன் ராஜேஷின் எண்ட்ரி, கோபி வீட்டில் உண்மை தெரிந்தது, அவர் விபத்தில் சிக்கியது, கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உண்மை பாக்யாவுக்கு தெரிந்தது என இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நகர்கிறது. இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கப் போகிறது என பார்க்கலாம். 


உண்மை தெரிந்த நிலையில் பாக்யா வீட்டுக்கு செல்ல அங்கு வேலைக்காரி செல்வியும், கோபியின் அப்பா மூர்த்தியும் மழையில் நனைந்த அவரை உடையை மாற்றச் சொல்லி மாடி அறைக்கு அனுப்புகின்றனர். ஆனால் அங்கு செல்லும் பாக்யா நடந்த சம்பவங்களை நினைத்து அதிர்ச்சியில் சிலை போல நிற்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் கோபியை சந்திக்க செல்லும் அவரது குடும்ப உறுப்பினர்களில் இளைய மகன் எழிலும், மூத்த மருமகள் ஜெனியும் மருத்துவமனை நிர்வாகத்திடம் சென்று கோபியுடன் இருந்தது யார் என கேட்க, அதற்கு அங்கு பணியில் இருப்பவர் இவ்வளவு நேரம் மனைவி தான் இருந்தார். இப்போது அவர் வீட்டுக்கு சென்று விட்டதாக தெரிவிக்கிறார். 


இதன்மூலம் பாக்யா வீட்டுக்கு வராமல் மருத்துவமனைக்கு தான் வந்ததாக இருவரும் நினைக்கின்றனர். உள்ளே சென்று மற்றவர்களிடம் இந்த விஷயத்தை சொல்கின்றனர். அதைக் கேட்டு கோபி குழப்பமடைகிறார். தன்னை பாக்யா பார்க்க வரவில்லை என தெரிவிக்க மற்றவர்களும் அதிர்ச்சியடைகின்றனர். உடனடியாக கோபி பாக்யா ஏன் தன்னை பார்க்க வரவில்லை, அம்மா ஏன் அவசரமாக வரச் சொன்னார்கள் என நடந்தவற்றை எண்ணி குழம்பி போகிறார். பாக்யா ஏன் வரவில்லை என கோபி கேட்க ஈஸ்வரி வீட்டுக்கு சென்று எல்லாவற்றையும் பேசிக் கொள்ளலாம் என கூறுகிறார்.  இதனையடுத்து ஈஸ்வரி,எழில் தவிர செழியன், ஜெனி, இனியா மூவரும் வீட்டுக்கு செல்கின்றனர்.


இதற்கிடையில் மாடிக்கு போன பாக்யாவை கூப்பிட்ட சென்ற செல்வியை அவர் திட்டி கீழே அனுப்புகிறார். அதற்குள் வீட்டு வரும் செழியன், ஜெனி, இனியா மூவரும் மூர்த்தியை சாப்பிட சொல்லி செல்வியை சாப்பாடு எடுத்து வர சொல்கின்றனர். அப்போது சமையலறையில் ஜெனி செல்வியிடம்  பாக்யா ஏன் மருத்துவமனையில் கோபியை விட்டு விட்டு தனியே வந்தார் என கேட்கிறார். அதற்கு செல்வி அக்கா வந்ததில் இருந்து சரியில்லை என தெரிவிக்க இருவரும் மாடிக்கு சென்று பாக்யாவை பார்க்க செல்கின்றனர். அங்கு பாக்யா சிலைப் போல நிற்பதைக் கண்டு செல்வி, ஜெனி இருவரும் அதிர்ச்சியடைவது போல இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. உண்மை எல்லாம் தெரிந்த பிறகு பாக்யா ஏன் அமைதி காக்கிறார் என ரசிகர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இதற்கு வரும் நாட்களில் விடை தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண