பாக்கியலட்சுமி சீரியலில் கோபிக்கும் பாக்யாவுக்கும் இடையே விவாகரத்து கிடைத்துள்ள நிலையில் இனி என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. 


விஜய் டிவி சீரியலில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் பாக்கியலட்சுமி சீரியல் ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட்டாக உள்ளது. இந்த சீரியலின் ஹீரோ கோபி குடும்பத்திற்காக மனைவி பாக்யாவை பிடிக்காமல் அவரோடு சகித்து கொண்டு வாழ்த்து வருகிறார். அந்த சமயத்தில் தன்னை சந்திக்கும் முன்னாள் காதலி ராதிகா மீது அவருக்கு மீண்டும் காதல் துளிர்கிறது. இதற்காக கோபி செய்யும் ஒவ்வொரு தகிடு தத்தங்கள் என்னென்ன என்பதான திரைக்கதை சுவாரஸ்யமாக சென்ற நிலையில் கடந்த சில எபிசோட்கள் அடுத்தடுத்து எதிர்பாராத திருப்பங்களை ஏற்படுத்தியது.


இந்த சீரியலில் கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்யலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, ராதிகாவாக நடிகை ரேஷ்மா ஆகியோர் நடிக்கின்றனர். பாக்யாவுக்கு கோபிக்கும் ராதிகாவுக்கும் இடையேயான உறவு குறித்து தெரிந்தது முதலே இத்தொடர் மிகுந்த எதிர்பார்ப்புடன் செல்கிறது.கடந்த வாரங்களில் வீட்டை விட்டு வெளியேறிய பாக்யாவை குடும்பத்தினர் வந்து சமாதானப்படுத்துவது, குழந்தைகளுக்காக பாக்யா மீண்டும் வீட்டுக்கு வந்தது, கோபிக்கு பாக்யா விவாகரத்து கொடுக்க முன்வந்தது போன்ற காட்சிகள் இடம் பெற்றது.  இனி இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என பார்க்கலாம். 


நீதிமன்றம் பாக்யாவுக்கும், கோபிக்கும் விவாகரத்து வழங்கிய நிலையில், அங்கு எழிலும் பாக்யாவும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு வரும் கோபி பாக்யாவிடம் கோபத்தை கொட்டுகிறார். வெளிஉலகத்தை பத்தி ஒன்னுமே தெரியாத உன்னுடன் குடும்பம் நடத்திய நான் தான் ஏமாளி...உனக்கு என்னை முன்னாடியே பிடிக்கவில்லை. அப்பவே ஏன் விவாகரத்து கேட்கல...நானே சொல்லட்டும் தானே காத்துகிட்டு இருந்த..இப்ப எல்லாரும் உன்னை நினைச்சி பாவப்படுவாங்கன்னு நினைக்கிற என சொன்னதும் எழில் டென்ஷன் ஆகிறார். 


இவ்வளவு வருஷம் வாழ்ந்த வாழ்க்கையை இப்படி தூக்கிப்போட்டு போற..எவ்வளவு திமிர் இருக்கும் உனக்கு என பாக்யாவை சொல்லும் கோபி, திரும்ப அந்த வீட்டில் கால் எடுத்து வச்சிடாதே...இல்லைன்னா நடக்குறதே வேற என கத்தி விட்டு கிளம்புகிறார். உடனே எழில் பாக்யாவிடம் ஏன் அமைதியாக இருக்கீங்க என கேட்க, அவரோ உரிமை இல்லாதவரிடம் என்னத்த கோபம் காட்ட என சொல்லி சமாதானப்படுத்துகிறார். கோர்ட்டில் இருந்து நேராக ராதிகா வீட்டுக்கு செல்லும் கோபி, விவாகரத்து தீர்ப்பை காட்டி நான் இவ்வளவு தூரம் பண்ணுனது எல்லாம் உனக்காக தான்.இனி நீ தான் முடிவு செய்ய வேண்டும் என கூறுகிறார். 


மறுபுறம் ராதிகா வீட்டுக்கு சென்று திட்டியதால் ஈஸ்வரிக்கும், மூர்த்திக்கும் வாக்குவாதம் ஏற்படுவதோடு இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இதனால் இனி வரும் எபிசோடில் ராதிகா என முடிவு எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 



மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண