விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியல் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. கோபியால் தனது சமையல் தொழிலை நிறுத்திய பாக்கியா தற்போது மீண்டும் கோபியாலே தனது தொழிலை தொடங்க உள்ளார். அதற்கு ராதிகாதான் காரணம் என்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
பாக்கியாவின் பிரச்சினையை பற்றி அறிந்த ராதிகா, கோபி தான் பாக்கியாவின் கணவர் என்றே தெரியாமல் கோபியிடம் பாக்கியாவின் பிரச்சினையை பற்றி கூறுகிறார். மேலும், கோபியிடம் டீச்சரின் கணவரை பார்த்தீர்களா? பேசினீர்களா? என்ன கூறினார்? என்று கேள்விக்கணைகளை தொடுக்கிறார்.
ராதிகா அளித்த அழுத்தத்தினால் வீட்டிற்கு சென்ற கோபி, தன் மனைவி பாக்கியாவிடம் உன்மேல எந்த தப்பும் இல்ல. அப்படி இருக்கும்போது நீ எதுக்கு பிசினசை நிறுத்தனும்? நீ உன்னோட பிசினசை நடத்து. யோசிச்சுப் பார்த்தேன். நான் அப்படி சொன்னது தப்புதான்னு புரிஞ்சுகிட்டேன். உனக்கு எதுக்கு தேவையில்லாத சிரமம் என்று நினைத்துதான் சொன்னேனு கூறுகிறார்.
கோபி சென்ற பிறகு ஈஸ்வரி, கோபியே ஓகே சொல்லிட்டானே. இனிமேல் உன் பிசினசை நடத்து என்று கூறுகிறார். இந்த சந்தோஷத்தில் இருந்த பாக்கியாவிற்கு ராதிகாவிடம் இருந்து அழைப்பு வர கோபி பிசினசை நடத்தச் சொன்ன தகவலை ராதிகாவிடம் பாக்கியா கூறுகிறார். அதற்கு காரணம் தான்தான் என்று ராதிகா சொல்ல முற்பட்டபோது கோபி அதைத் தடுக்கிறார்.
அந்த நேரத்தில் எழில் அமிர்தாவின் காதல் காட்சிகளுடன் இன்றைய எபிசோட் நிறைவடைகிறது. பாக்கியாவிடமும், ராதிகாவிடமும் ஒவ்வொரு முறையும் கோபி தப்பித்து வரும் சூழலில், கோபி எப்போது வசமாக சிக்குவார்? என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.
மேலும் படிக்க : Watch Video: கட் - அவுட்டுக்கு பால் அபிஷேகம்.. நெகிழ்ந்த விஜய் சேதுபதி மனைவி.. அடுத்து நடந்தது இதுதான்..
மேலும் படிக்க : Samantha Unknown Facts: நீரிழிவு.. பார்ட் டைம் வேலை.. சமந்தாவை பற்றி தெரியாத சுவாரஸ்யங்கள் இதோ..
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்