பாகுபலி வெளியானதிலிருந்து இந்திய சினிமா அளவில் பிரபாஸுக்கு நல்ல மார்க்கெட் இருந்து வருகிறது. அவரின் திரைப்படங்கள் மொழி எல்லையை தாண்டி, வடக்கு, தெற்கு இரண்டிலும் சமமான நிலையில் படங்கள் ஓடும் ஒரு நிலையை எட்டியுள்ளது. பிரபாஸ் கடைசியாக நடித்த சாஹோ படத்துக்கு ரூ.100 கோடி ஊதியம் பெற்றார் என பரவலாக தகவல்கள் பரவின.
இந்நிலையில்,இணையத்தில் பிரபாஸின் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் பிரபாஸ் தாறுமாறாக உடல் எடை கூடி உள்ளார். பாகுபலி படத்தில், வாட்ட சாட்டமாக இருந்து பெண்களின் மனம் கவர்ந்து, நிறைய ரசிகைகள் உருவாக்கி வைத்திருந்த பிரபாஸ் இப்படி ஆனதில் உள்ள மனவருத்ததை வெளிப்படுத்துகிறார்கள் நெட்டிசன்கள். பிரபாஸ் ஏன் இப்படி ஆகிவிட்டார் என்று அவரின் தீவிர ரசிகைகள் கேட்டு வருகின்றனர்.
இப்போதெல்லாம் இயக்குனர் ராஜமவுலி படத்தில் நடித்தால் கதாநாயகனுக்கு லுக் போய்விடுகிறது என்றும், இந்திய அளவில் பெரிய மார்க்கெட் கிடைத்தாலும் லுக்கில் எதோ பாதிப்பு உண்டாகிறது என்றும், பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் முகமே மாறிவிட்டது, இப்போது Jr.NTR & ராம்சரண் முகமும் குண்டாகிவிட்டது போல ஆகிவிட்டது என்று ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
பிரபலங்களின் வாழ்க்கை வெளியிலிருந்து பார்க்க ஸ்வாரஸ்யமானதாக இருந்தாலும் அவர்கள் வாழும் வாழ்க்கை பல சவால்களை நாளுக்கு நாள் தந்துகொண்டே இருக்கிறது. இந்தியாவின் புகழ்மிக்க ஒரு நடிகரை இரக்கமின்றி பாடி ஷேமிங் செய்துகொண்டிருக்கிறது நம்மூர் இணையம். ஆனால் உண்மையில் அவர் தற்போது நடிக்கப்போகும் ஆதிபுருஷ் திரைப்படத்திற்காக ராமர் கதாப்பாத்திரத்தில் நடிக்க உடல் எடையை கூட்டி வருகிறாராம். தான் சார்ந்த தொழிலுக்காக உடலை வருத்தி உழைக்கும் நல்ல மனிதரை இப்படி ட்ரோல் செய்வது தவறு என்று சில ரசிகர்கள் பிரபாஸ் பக்கமும் நிற்கின்றனர்.
பிரபாஸின் 22வது படமான ஆதிபுருஷ் படத்தை, ஓம் ராவத் என்பவர் இயக்கி வருகிறார். ராமாயணத்தை கதை களமாக கொண்டு எடுக்கப்பட உள்ள இந்த படத்தில் ராமராக பிரபாஸ் நடிக்கிறார். ராவணனாக, சையது அலி கான் நடித்து வருகிறார். 3 டி தொழில்நுட்பத்தில் உருவாக உள்ள இந்த திரைப்படம் தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கில் உள்ளிட்ட 5 மொழிகளில் உருவாக உள்ளது. இத்திரைப்படம் 2023ல் வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
நடிகர் பிரபாஸ் ராதா கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ராதே ஷ்யாம் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் முடிந்த நிலையில், பொங்கலுக்கு இத்திரைப்படம் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும், இந்த மூன்று படங்களையும் முழுமையாக முடித்துக் கொடுத்த பிறகு நாக் அஸ்வின் இயக்கும் படத்தில் நடிக்க திட்டமிட்டுள்ளார் பிரபாஸ்.