39 வயது நிரம்பிய பிரபல நடிகை அனுஷ்கா 1981ம் ஆண்டு மங்களூரில் பிறந்தவர். தனது பட்டப்படிப்பை பெங்களூருவில் முடித்த அனுஷ்கா ஒரு யோகா பயிற்றுனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. நடிப்பின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அனுஷ்கா படவாய்ப்புகளை தேடத்தொடங்கினர். 


திரையுலக பிரவேசம்.


2005ம் ஆண்டு பிரபல நடிகர் நாகார்ஜூனாவின் தயாரிப்பில் வெளியான சூப்பர் என்ற படத்தின் மூலன் நடிகையாக திரையுலக பிரவேசம் அடைந்தார் அனுஷ்கா. பிரபல இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் வெளியான Vikramarkudu என்ற படத்தில் தோன்றிய அனுஷ்கா பிரபலமான நடிகையாக மாறத்தொடங்கினர். தமிழில் இவர் முதன்முதலில் அறிமுகமான திரைப்படம், மாதவனின் இரண்டு என்பது குறிப்பிடத்தக்கது. தெலுங்கு தமிழ் என்று இரண்டு மொழிகளிலும் பல படங்களில் சிறந்த பல கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கினர் அனுஷ்கா.  




முன்னணி நாயகி


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் லிங்கா, தளபதி விஜயுடன் வேட்டைக்காரன், தல அஜித்துடன் என்னை அறிந்தால், சூர்யாவுடன் சிங்கம் மற்றும் விக்ரமுடன் தாண்டவம் என்று முன்னணி நாயகர்கள்கள் பலருடன் கைகோர்த்து தமிழ் திரையுலகின் முன்னணி நாயகி என்ற நிலையை அடைந்தார். 2015ம் ஆண்டு ராஜா மௌலி இயக்கத்தில் வெளியான பாகுபலி அனுஷ்காவை வேறுஒரு பரிமாணத்திற்கு எடுத்துச்சென்ற படமென்றால் அது மிகையல்ல. ருத்ரமாதேவி போன்ற படங்களில் அனுஷ்கா முன்னணி கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி  


இந்நிலையில் 25 வயது மதிக்கத்தக்க இளைஞனுக்கும் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணுக்கும் இடையே துளிர்க்கும் காதல் கதை ஒன்றில் நடிக்க அனுஷ்கா ஷெட்டி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த கதையின் நாயகனாக நவீன் போலிஷெட்டி நடிக்கவுள்ளார் என்றும் கூறப்படுகிறது. சர்ச்சையான இந்த கதைக்களம் குறித்து பல யுகங்கள் தற்போதே இணையத்தில் வலம்வர தொடங்கியுள்ளது.   




இறுதியாக நடிகை அனுஷ்கா ஹேமந்த் மதுக்கர் என்பவர் இயக்கிய நிசப்தம் என்ற படத்தில் நடித்தார். வாய் பேசமுடியாத ஒரு ஓவியக்கலைஞராக தனது இயல்பான நடிப்பை வெளிப்படுத்தினர். இறுதியாக அனுஷ்கா நடித்த படமும் இதுவென்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவர் எந்த திரைப்படத்திலும் இன்னும் அதிகாரபூர்வகமாக ஒப்பந்தமாகவில்லை என்ற நிலையில் தற்போது மிஸ் ஷெட்டி மிஸ்டர் போலிஷெட்டி படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அனுஷ்கா இந்த தகவலை இன்னும் உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


பாடல் எழுத வாய்ப்பளிக்கும் வசந்தபாலன் - நீங்கள் செய்யவேண்டியது இதுதான்!




பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்த அனுஷ்கா, ருத்ரமாதேவி படத்தில் நடித்ததற்காக Flimfare உள்பட 6 விருதுகளை பெற்றது குறிப்பிடத்தக்கது. பாகுபலி, பாகமதி, தெய்வத்திருமகள் உள்ளிட்ட படங்களுக்காகவும் அனுஷ்கா பல விருதுகளை பெற்றுள்ளார்.