சின்னத்திரை மூலம் அறியப்பட்ட அசீம் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு பிரபலமான ஒரு பர்சனாலிடியாக முன்னேறியுள்ளார். சில நாட்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்த பிக் பாஸ் சீசன் 6 வெற்றியாளராக மகுடம் சூடினார் அசீம். 


 



 


அடாவடி அசீம் :



பிக் பாஸ் பயணத்தில் மிகுந்த அடாவடியான ஒரு போட்டியாளராக, கோபக்கார போட்டியாளராக ஒருவரை கூட விட்டுவைக்காமல் அனைவருடன் பகைமையை வளர்த்து கொண்டு சண்டையிட்டவர் அசீம் மட்டுமே. டாஸ்க் என்று வந்துவிட்டால் அசீமின் மற்றுமொரு முகத்தை பார்க்கலாம். இப்படி எப்போது ஏழரையை கூட்டிய அசீம் எப்படி டைட்டில் வின்னரானார் என்பது குறித்து பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அவரின் வெற்றியில் நியாயமில்லை என கடுப்பில் கொந்தளித்தனர் நெட்டிசன்கள். இப்படி அசீமுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தி வருபவர்கள் தாறுமாறாக சோசியல் மீடியாவில் போஸ்ட் செய்து வருகிறார்கள். 


 






 


அசீம் வெளியிட்ட முதல் வீடியோ :


பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்த பிறகு  முதல் முறையாக அசீம் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றிகளை தெரிவித்துள்ளார். மேலும் இரண்டு நாட்கள் தாமதமாக தனது நன்றிகளை தெரிவித்ததற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார். பிக் பாஸ் வீட்டினுள் 106 நாட்கள் எனது பயணம் மிகவும் கடுமையாக இருந்தது. எனது நம்பிக்கையை நீங்கள் மேய்ப்படுத்தி உள்ளீர்கள். 14 வாரமும் நான் நாமினேட் செய்யப்பட்டேன். ஒவ்வொரு வாரமும் உங்களின் வாக்குகளால் என்னை காப்பாற்றி உள்ளீர்கள். சோசியல் மீடியாவில் நீங்கள் எனக்கு கொடுத்த ஆதரவை நான் வெளியில் வந்த பிறகு பார்த்த பிறகு திகைத்து போனேன். எப்போதும் மக்களுக்காக  நான் இருப்பேன். உங்களின் இந்த அன்புக்கு நான் எப்படி கைமாறு செய்வேன் என தெரியவில்லை" என கூறியிருந்தார். 


 


சொன்னதை செய்யும் அசீம் :


அதே போல அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் சொன்னது போல 'நான் டைட்டில் வென்று பெரும் 50 லட்சம் ரூபாயில் 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவியரின் பள்ளி கல்விக்காக அந்த தொகை டோனட் செய்வேன் என கூறியது போல நான் நிச்சயம் செய்வேன்" என உறுதியளித்துள்ளார் அசீம். இதை பார்த்த நெட்டிசன்கள் இவரு நல்லவரா கெட்டவரா என கலாய்த்து வருகிறார்கள்.