விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் அசீம். சின்னத்திரை நடிகரான அசீம் பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளராக என்ட்ரி கொடுத்த பிறகு அவரின் ரீச் வேற லெவலில் இருந்தது. சண்டை சச்சரவு என தினசரி ப்ரோமோவில் இடம் பெரும் அளவிற்கு பிரபலமானார். அவருக்கு சோசியல் மீடியாவில் புரொமோஷனும் அதிக அளவில் இருந்தது. இறுதியில் அசீம் பிக் பாஸ் சீசன் 6 டைட்டில் வின்னராகவும் அறிவிக்கப்பட்டார்.


அவர் டைட்டில் வின்னர் என அறிவிக்கப்பட்டதால் ஏராளமான சர்ச்சைகள் எழுந்தன. அவரின் வெற்றியில் நியாயமில்லை என கடுப்பில் கொந்தளித்து அசீமுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தினர். மேலும் அசீம் பிக் பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்னர் சொன்னது போல 'நான் டைட்டில் வென்று பெரும் 50 லட்சம் ரூபாயில் 25 லட்சம் ரூபாயை கொரோனாவால் பெற்றோர்களை இழந்த மாணவ மாணவியரின் பள்ளி கல்விக்காக அந்த தொகை டோனட் செய்வேன்' என உறுதியளித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  


 



ஹீரோவாக அறிமுகமாகும் அசீம் :


சமீப காலமாக அசீம் பற்றிய எந்த தகவலும் வெளிவராத நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அசீம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்'. 'சீமராஜா', 'ரஜினிமுருகன்' உள்ளிட்ட திரைப்படங்களையும் நடிகர் விஜய் சேதுபதி நடித்த 'டிஎஸ்பி' திரைப்படத்தையும் இயக்கியதன் மூலம் பிரபலமான இயக்குனர் பொன்ராம் இயக்கும் அடுத்த படத்தில் தான் அசீம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார் என நெருங்கிய சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


ராஜஸ்தான் பயணம் :


சிவகார்த்திகேயன் - பொன்ராம் கூட்டணியில் உருவான மூன்று ஹிட் திரைப்படங்களும் கிராமிய பின்னணியில் காமெடி கலந்த  என்டர்டெயின்மென்ட் திரைப்படமாக அமைந்தது. அசீம் - பொன்ராம் கூட்டணியில் உருவாகும் இப்படமும் ஒரு கிராமத்து சப்ஜெக்ட் படமாக தான் உருவாக உள்ளது என கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. பேச்சுவார்த்தைக்காகவும், லொகேஷன் பார்ப்பதற்காகவும் இருவரும் ராஜஸ்தான் சென்றுலாதாகவும் அவர்கள் சென்னை திரும்பியதும் படத்தின் தயாரிப்பு நிறுவனம், தொழில்நுட்ப கலைஞர்கள், டைட்டில் மற்றும் சக நடிகர்கள் குறித்த அதிகாரப்பூர்வமான விவரங்களை வெளியிடுவார்கள் என கூறப்படுகிறது.


இன்றும் ரசிகர்களை எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாத எவர்கிரீன் திரைப்படமாக இருக்கும் 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்', 'ரஜினி முருகன்' போன்ற நகைச்சுவை காட்சிகள் நிறைந்த படமாக தான் இப்படமும் அமைய இருப்பதாக கூறப்படுவதால் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் இருக்கிறார்கள்.