அயோத்தி ஹீரோயினை நமக்கு முன்னாடியே தெரியுமா... இவங்களா இது...? மீண்டும் ட்ரெண்டாகும் பழைய வீடியோ!

க்யூட்டாக இந்தி விடுகதை ஒன்றை கண் அடித்து முத்தம் கொடுத்தபடி ப்ரீத்தி சொல்லும் வீடியோ ஒன்று அவர் சீரியலில் நடித்தபோது வெளியாகி இணையத்தில் மிகப்பெரும் வைரலானது.

Continues below advertisement

இயக்குநர், நடிகர் சசிகுமார் நடிப்பில், அ.மந்திரமூர்த்தி இயக்கத்தில் வெளியாகி சமீபத்தில் சர்ப்ரைஸ் ஹிட் அடித்த திரைப்படம் ‘அயோத்தி’.

Continues below advertisement

கடந்த மார்ச் 3ஆம் தேதி வெளியாகி அனைத்து தரப்பினர் மத்தியிலும் லைக்ஸ் அள்ளிய அயோத்தி திரைப்படத்தின் மூலம் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி ஹீரோயினாக அறிமுகமாகி வரவேற்பைப் பெற்றார்.

இவர நமக்கு முன்னாடியே தெரியுமா...

இந்நிலையில், ப்ரீத்தி அஸ்ரானி தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்கெனவே பரிட்சயமானவர் என்பதைக் கண்டறிந்துள்ளதுடன் அவரது பழைய வீடியோவையும் இணையவாசிகள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

தெலுங்கு சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ப்ரீத்தி அஸ்ரானி ஃபிடா, யசோதா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். ஆனால் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கெனவே அவர் பரிட்சயமானது சீரியல் உலகின் மூலம் தான்.

வைரல் வீடியோ

2018 முதல் 2020ஆம் ஆண்டு வரை சன் டிவியில் ஒளிபரப்பான மின்னலே தொலைக்காட்சித் தொடரில் ஷாலினி எனும் கதாபாத்திரத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி அப்போதே ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளை கொண்டார்.

மேலும் க்யூட்டாக இந்தி விடுகதை ஒன்றை கண் அடித்து முத்தம் கொடுத்தபடி ப்ரீத்தி சொல்லும் வீடியோ ஒன்று அவர் மின்னலே சீரியலில் நடித்தபோது வெளியாகி இணையத்தில் மிகப்பெரும் வைரலானது.

இந்நிலையில் தற்போது அயோத்தி படம் பெரும் ஹிட் அடித்ததுடன் ப்ரீத்தியும் கவனமீர்த்துள்ளார். அயோத்தி படத்தில் ஷிவானி எனும் சீரியஸான கதாபாத்திரத்தில் ப்ரீத்தி தோன்றியிருந்த நிலையில், அவரை ஆள் அடையாளமே தெரியவில்லை.

இந்நிலையில் தற்போது அயோத்தி படத்தில் நடித்திருப்பது 2 ஆண்டுகளுக்கு முன் வைரலான ப்ரீத்தி தான் எனக் கண்டறிந்து இணையவாசிகள் மீண்டும் இந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். 

 

அயோத்தி திரைப்படம்

அயோத்தி படத்தில் யஷ்பால் ஷர்மா, புகழ் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.  இசையமைப்பாளர் NT ரகுநந்தன்  இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார்,மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். 

அயோத்தியிலிருந்து ராமேஸ்வரத்திற்கு சுற்றுலா வரும் இந்து குடும்பம் எதிர்பாராத சிக்கலில் மாட்டிக்கொள்ளும்போது, சசிகுமார், புகழ் உள்ளிட்ட இஸ்லாமியர்கள் முரண்பாடுகளைக் கடந்து உதவுவதை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

பெரிய ஆர்ப்பாட்டங்கள், ப்ரொமோஷன் இல்லாமல் வெளியான அயோத்தி திரைப்படம் சைலண்ட்டாக ஹிட் அடித்து அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து பாராட்டுகளைப் பெற்று லைக்ஸ் அள்ளியது. 

மேலும் சென்ற ஏப்ரல் 7ஆம் தேதி zee 5 ஓடிடி தளத்தில் வெளியானது. முன்னதாக நடிகர் ரஜினிகாந்த் அயோத்தி திரைப்படத்தைப் புகழந்து பாராட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement
Sponsored Links by Taboola