தமிழ் சினிமாவில் இளம் இயக்குநர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அவர்களின் படைப்புகளும் இந்த காலகட்டத்திற்கு ஏற்ப மாறுபட்டு வருவதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் டைம் ட்ராவலை மையமாக வைத்து 2015ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'இன்று நேற்று நாளை'. இப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார் ஆர். ரவிக்குமார்.  

Continues below advertisement

விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ், ரவி சங்கர், ஜெயபிரகாஷ், அனுபமா குமார், முனீஷ்காந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற ஒரு திரைப்படம். முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார் ஆர். ரவிக்குமார். 

Continues below advertisement

அடுத்த இரண்டு ஆண்டுகளிலேயே சிவகார்த்திகேயனை வைத்து புதுமையான ஒரு கான்செப்ட் ஒன்றை தயார் செய்து இருந்தார். சயின்ஸ் பிக்ஷன் பாணியில் ஏலியன் கான்செப்டை வைத்து படம் எடுக்க திட்டமிட்டு இருந்தார். கடந்த 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா மற்றும் பல காரணங்களால் நீடிக்கப்பட்டு சமீபத்தில் தான் வெளியானது. அது தான் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், யோகி பாபு, ஈஷா கோபிகர், கருணாகரன் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான 'அயலான்' திரைப்படம்.  புதியதொரு கதைக்களத்தில் உருவான இப்படத்தை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்தனர். 

வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியிருந்தாலும் எதிர்பார்த்த வெற்றியைப் படம் பெற முடியாமல் போனது.  பொங்கலுக்கு தனுஷின் கேப்டன் மில்லர் படத்துடன் நேரடியாக போட்டியிட்டு களத்தில் இறங்கியது அயலான் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

இந்நிலையில் அயலான் இயக்குநர் ஆர்.ரவிக்குமார் குட் நியூஸ் ஒன்றை தனது சோசியல் மீடியா மூலம் பகிர்ந்துள்ளார். அவருக்கும் பிரியா கணேசன் என்பவருக்கும் கடந்த 2016ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதியினருக்கு ஏற்கனவே நறுமுகை என்ற ஒரு பெண் குழந்தை இருக்கும் நிலையில், இவர்களுக்கு இரண்டாவதாக ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது.  இந்த சந்தோஷமாக செய்தியை அனைவருக்கும் தெரிவிக்கும்படி தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் போஸ்ட் செய்து இருந்தார். அவரின் இந்த போஸ்டுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். "உங்கள் அன்பு வாழ்த்துக்களால் வளம் பெறுவான்" என நன்றி தெரிவித்துள்ளார் இயக்குநர் ஆர். ரவிக்குமார்.