இந்தப் பொங்கலுக்கு கோலிவுட்டில் படையெடுத்த திரைப்படங்களின் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனைப் பார்க்கலாம். 


பொங்கல் வெளியீடு


இந்த ஆண்டு பொங்கலுக்கு பல்வேறு ஜானர் திரைப்படங்கள் வெளியாகியுள்ளன. கேப்டன் மில்லர், அயலான், மெரி கிறிஸ்துமஸ், மிஷன் உள்ளிட்ட படங்கள் நேற்று ஜனவரி 12ஆம் தேதி வெளியாகியுள்ளன. இதில் எந்தப் படம் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது, முதல் நாளில் எந்தப் படம் எவ்வளவு வசூலைக் குவித்தது என்று பார்க்கலாம். பாக்ஸ் ஆஃபிஸ் தரவுகளை வெளியிடும் சாக்னிக் தளம் மற்றும் அதிகாரப்பூர்வ படக்குழு ஆகியோரின் தகவல்கள் அடிப்படையில் பொங்கல் ரேஸில் முந்துவது யார் எனப் பார்க்கலாம்!


கேப்டன் மில்லர்




அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் , பிரியங்கா மோகன்,  ஷிவராஜ் குமார், நிவேதா தாமஸ், அதிதி பாலன், சந்தீப் கிஷன், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் கேப்டன் மில்லர். ஜி.வி பிரகாஷ் இசையமைத்து சத்யஜோதி ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.






80 கோடி ரூபாய் பொருட்செலவில் எடுக்கப்பட்ட கேப்டன் மில்லர் தனுஷின்  திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம். ஆக்‌ஷன் காட்சிகள், தனுஷின் மிரள வைக்கும் நடிப்பு என கேப்டன் மில்லர் திரைப்படம் ரசிகர்களிடம் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. முதல் நாளில் கேப்டன் மில்லர் படம் இந்திய அளவில் 10 கோடி வசூல் செய்துள்ளது.


அயலான் 




ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அயலான். ரகுல் ப்ரீத், கருணாகரன், யோகி பாபு உள்ளிட்டவர்கள் இப்படத்தின் இணைந்து நடித்துள்ளார்கள். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏலியன் ஃபேண்டஸி படமாக உருவாகியிருக்கும் அயலான் படத்தின் கதை மற்றும் வி.எஃப். எக்ஸ் காட்சிகள் ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. அயலான் திரைப்படம் முதல் நாளில் இந்தியளவில் 4.5 கோடி வசூல் செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது


மிஷன் சாப்டர் - 1




ஏ.எல் விஜய் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள படம் மிஷன் சாப்டர் -1 . நிமிஷா சஜயன், எமி ஜாக்ஸன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். ஜி.வி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். மிஷன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை ரசிகர்களிடம் பெற்றுள்ளது. மிஷன் படம் முதல் நாளில் 20 லட்சங்களை வசூலித்துள்ளதாகத் தகவல் இணையத்தில் வெளியாகியுள்ளது.


மெரி கிறிஸ்துமஸ்




விஜய் சேதுபதி கத்ரீனா கைஃப் இணைந்து நடித்துள்ள படம் மெரி கிறிஸ்துமஸ். ஸ்ரீராம் ராகவன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ராதிகா ஆப்தே, ராதிகா சரத்குமார், சண்முக ராஜன், காயத்ரி, ராஜேஷ் ஆகியோர் நடித்துள்ளனர். தமிழ், இந்தி என இரு மொழிகளில் வெளியான இந்தப் படம் முதல் நாளில்  உலக அளவில் 3.05 கோடிகளையும், இந்திய அளவில் 2.03 கோடிகளையும்  வசூல் செய்துள்ளது.  




மேலும் படிக்க : Captain Miller Review: "தரமான ஆக்ஷன் விருந்து" தனுஷின் கேப்டன் மில்லர் பட விமர்சனம் இதோ!


Ayalaan Review: ஏலியனுடன் “பொங்கல்” .. குழந்தைகளைக் குறிவைத்த சிவகார்த்திகேயன்.. அயலான் திரைப்பட விமர்சனம்!