Ayalaan Trailer: ஹாலிவுட் படங்களான ஈடி, ட்ரான்ஸ்ஃபார்மர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகியவற்றின் தரத்தை அயலான் படம் இருப்பதாக இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் பேசியுள்ளார். 

 


ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் நடிக்கும் அயலான் படம் திரைக்கு வர தயாராகியுள்ளது. படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சிவகார்த்திகேயனுடன் இணைந்து யோகிபாபு, கருணாகரன் என பலர் நடித்துள்ளனர். ஏலியன் ஜானரில் உருவான அயலான் படம் நடிகர் சிவக்கார்த்திகேயன் நடிப்பில் அடுத்த ஆண்டு அதாவது 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பொங்கலுக்கு ரிலீசாக உள்ளது.
  

 

படத்தின் டீசர் வெளியானபோதே ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகவுள்ள இந்தப் படத்தின் புரோமோஷன் வேலைகளை படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் நடத்தி வருகின்றது. அவ்வகையில் இந்தப் படத்தின் இசைவெளியீட்டு விழாவை  படக்குழு எளிமையாக  நடத்தியுள்ளது. 

 

சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நடைபெற்ர விழாவில் மாரி செல்வராஜ், ஏ.ஆர். ரஹ்மான், ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இடம் சின்னதா இருந்தாலும் நம்ம சத்தம் பெருசா இருக்கும் என சிவகார்த்திகேயன் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். அதில் பேசிய கேஜிஆர் ஸ்டூடியோஸ் நிறுவனர் கோட்டபாடி ஜெயம் ராஜேஷ் பேசும் போது தெலுங்குக்கு ஒரு பாகுபலி, கன்னட சினிமாவுக்கு ஒரு கேஜிஎஃப் போல தமிழுக்கு அயலான் இருக்கும் என பேசியிருந்தார். 

 





 

இதேபோல் அயலான் படம் குறித்து பேசிய ஏ.ஆர். ரஹ்மான், ஹாலிவுட் படங்களான ஈடி, ட்ரான்ஸ்ஃபார்மர், ஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் ஆகியவற்றின் தரத்தை அயலான் படம் எட்டியுள்ளது என்றும், அயலான் படத்தில் பிஜிஎம் பணிக்காக தன்னுடைய முயற்சி 5 மடங்காக இருந்தது என்றும், அதற்காக 2 மாதங்களாக உழைத்ததாகவும் கூறியுள்ளார். அயலான் படம் அனைவருக்கும் பிடிக்கும் என்றும் ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.