’டைட்டானிக்’ படத்துக்குப் பிறகு இயக்குநர் ஜேம்ஸ் காமரூனின் அடுத்த பிரம்மாண்டப் படமான அவதார் இரண்டாம் பாகத்தில் கேத் வின்ஸ்லெட் நடிக்க உள்ளார்.
அவதார் 2
தன் பிரம்மாண்டப் படைப்புகளால் பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்களைத் திணறடித்து கவர்ந்து வருபவர் ஜேம்ஸ் காமரூன். இவர் எடுத்த டைட்டானிக், அவதார் போன்ற பிரம்மாண்ட படங்கள் நாடு, இனம், மொழி தாண்டி உலக மக்களை மொத்தமாகக் கவர்ந்தது.
இந்நிலையில் சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு வெளிவரும் அவதார் படத்தின் இரண்டாம் பாகமான 'அவதார் த வே ஆஃப் வாட்டர்’ படம் வரும் டிசம்பர் மாதம் 16ஆம் தேதி 160 மொழிகளில் வெளியாக உள்ளது.
இப்படம் சுமார் ரூ.25 ஆயிரம் கோடி வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் செய்த படம் என்ற சாதனையை நிகழ்த்தியது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும் கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியக்க வைத்தன.
மீண்டும் இணைந்த டைட்டானிக் ஜோடி
இப்படத்தில் டைட்டானிக் படத்துக்குப் பிறகு நடிகை கேத் வின்ஸ்லெட் உடன் 275 ஆண்டுகளுக்குப் பிறகு ஜேம்ஸ் காமரூனுடன் இணைந்துள்ளார். இந்நிலையில், தற்போது கேத் வின்ஸ்லெட்டின் கதாபாத்திரம் குறித்து ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.
நவி வீரர் என்னும் முக்கியக் கதாபாத்திரத்தில் இப்படத்தில் கேத் வின்ஸ்லெட் நடித்துள்ளார். இந்நிலையில் உலகம் முழுவதும் 10 ஆண்டுகளாக அடுத்த பாகத்துக்காக காத்திருக்கும் ரசிகர்களை இந்த அறிவிப்பு உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
பண்டோரா எனும் உலகத்தில் வாழும் ஏலியன்களைப் பற்றிய கதையான இப்படத்தில், பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் ஆகியவை குறித்து இப்படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது.
முன்னதாக பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், ’அவதார்’ முதல் பாகம் வரும் செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.