சினிமா ரசிகர்களை ஹாலிவுட் திரையுலகம் என்றுமே ஏமாற்றியதில்லை. அனைத்துலக சினிமாவிற்கும், பிரம்மாண்டத்தின் அர்தத்தை டைட்டானிக் படத்தின் வாயிலாக உணர்த்தியவர் ஜேம்ஸ் கேமரூன். இந்த படத்தின் பிரம்மாண்டத்தை அப்படியே விழுங்கியது, அவரது அடுத்த படைப்பான அவதார். 


2009 ஆம் ஆண்டில் வெளியான அவதார் திரைப்படம், டைட்டானிக்கின் Highest Grossing Film (மிக அதிக வசூல் செய்த திரைப்படம்) எனும் ரெக்கார்டை ப்ரேக் செய்தது. 3டி வடிவில் உருவான இப்படம், குழந்தைகள், பெரியவர்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.  வேற்று கிரகத்தில் வாழும் நாவி இன மக்களின் வளங்களை திருடும் மனிதர்கள், அதற்கு எதிராக போராடும் நாவி இனம், இவர்களுக்கு துணையாக நிற்கும் ‘ஹைப்ரிட்’ அவதாரான ஹீரோ, இவர்களைச் சுற்றி சுழலும் சையின்ஸ் பிக்ஷன் கதைதான் அவதார். 


டைட்டானிற்கு முன்பே எழுதப்பட்ட அவதார்!


1997-ல் வெளியான டைட்டானிக் படத்தின் மூலமாகத்தான், பல பேருக்கு ஜேம்ஸ் கேமரூனின் முகமே தெரியவந்தது. இதனால், டைட்டானிக்தான் இவரது முதல் படைப்பு என பலர் நினைத்துகக் கொண்டிருக்கின்றனர். உண்மையில், 1994ஆம் ஆண்டே, அவதார் படத்தின் கதை எழுதப்பட்டுவிட்டது. ஆனால் அவதார் படத்திற்கு தேவையான தொழில் நுட்பங்கள், க்ராபிக்ஸ் டெக்னிக்ஸ் எதுவும் அப்போது கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால் அவதாரின் படைப்பை தள்ளிப் போட்ட கேமரூன், 2009 ஆம் ஆண்டில் விஷிவல் ட்ரீட்டாக இப்படத்தை இயக்கினார். புதுமை என்ற விஷயத்தை, ரசிகர்களுக்கு புரியும் வகையிலும், தெகட்டாத வகையிலும், இப்படத்தின் வாயிலாக கொடுத்திருந்தார் கேமரூன். படம் வெளியாகி, உலகளவில் மாஸாக வசூல் செய்ய, அடுத்த படத்தின் ரிலீஸிற்காக பல நாட்களாக காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு தங்க வேட்டையாக வந்திறங்கியது அவதார் 2ஆம் பாகத்தின் ட்ரெய்லர். 




அவதார்: தி வே ஆஃப் வாட்டர்:


அவதார் படத்தின் இரண்டாம் பாகம்தான் Avatar: The way of water. முதல் பாகத்தில் வந்த, ஜேக் சல்லி, நைட்ரி, பார்கர் செல்ஃப்ரிஜ் உள்ளிட்ட கதாப்பாத்திரங்கள் இப்படத்திலும் முக்கிய கதாப்பாத்திரங்களாக இடம் பெற்றுள்ளது. படத்தின் ஃபேமஸ் டைலாக்கான I see you என்ற வசனம் ட்ரெய்லரில் இடம் பெற்று, அனைவருக்கு கூஸ் பம்ப்ஸை கிளப்பி விட்டுள்ளது. தங்களைக் காக்கவும், தங்களின் நிலத்தைக் காக்கவும் போராடிய நாவி இன மக்களின் போராட்டம், இந்த பாகத்திலும் தொடர்கிறது. இந்த போராட்டத்தில், வெவ்வேறு நாவி இன மக்களும் இடம்பெறுகின்றனர். இப்படத்தில், டைட்டானிக் ஹீரோயின் கேட் வின்ஸ்லட், வின் டீசல் உள்ளிட்ட முக்கிய நடிகர்களும் இடம்பெற்றுள்ளனர்.  படத்தின் ட்ரெய்லர் வெளியான சில நிமிடங்களிலேயே பல மில்லியன் வியூஸ்களை கடந்து வைரலானது. 




அவதார் ரீரிலீஸ்:


சில நாட்களுக்கு முன்பு, அவரதார் படம் மீண்டும் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இப்படத்தின் இறுதிக் காட்சிக்கு பிறகு, குட்டி அவதார்கள் கடலுக்குள் நீந்துவது போன்று காட்சிப்படுத்தப்பட்டிருந்தது. இது, அவதார் ரசிகர்களின் ஹைப்பை இன்னும் அதிகமாக்கியுள்ளது. 


அவதாரைப் பற்றிய அறியாத தகலவ்கள்:





  • அவதார் படத்தில் பணிபுரிந்த இசைக் கலைஞர்கள், பண்டோராவின் மிருகங்களுக்கு நிஜ வாழ்க்கை விலங்குகளின் ஒலிகளைப் பயன்படுத்தினராம்.

  • அவதார், ஒரு அனிமேஷன் படமாக இருந்தாலும் இதில் இடம் பெற்றுள்ள உடைகள்,  உண்மையாகவே மனிதர்கள் உடுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவை. 

  • அவதாரில் இசையமைப்பதற்காகவே பல கருவிகள் உருவாக்கப்பட்டன. 

  • படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன், 2 வகையான 3டி கேமராக்களை இப்படத்திற்காக பயன்படுத்தினாராம்.

  • பாண்டோராவில் வாழும் அவதார் இன மக்கள் பேசும் மொழி, சைனீஸ், பெர்ஷியன் மற்றும் அம்ஹாரிக் போன்ற மொழிகளிலின் கலவைதானாம். 

  • அவதார் படத்தை எடுத்துக் கொண்டிருந்த போதே, படத்தின எடிட்டிங் வேலைகளும் துவங்கி விட்டதாம். 

  • அவதாரின் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் பட்ஜெட் அதிகம்.

  • முதல் பாகத்தில் மொத்த நாவி இன மக்களை மட்டுமே மைய்யமாக கொண்ட கதையாக அவதார் அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தில், ஹீரோ தனது குடும்பத்தை காக்கவும போராடும் வகையில் கதைகளம் அமைக்கப்பட்டுள்ளது. 

  • அவதார் 2-வை அடுத்த வெளியாகவுள்ள பாகங்களின் கதை, எப்போதோ ரெடியாகிவிட்டது. 

  • படத்தின் பெரும்பாலான பாகம், கடலுக்கு அடியில் எடுக்கப்பட்டுள்ளது. 

  • இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கு, தண்ணீருக்குள் சாகசம் செய்யும் அளவிற்கு ட்ரெய்னிங் கொடுக்கப்பட்டுள்ளது.