இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியாக உள்ள  'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்'  படத்தை காண உலகமே காத்துக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் 20th Century Studios வழங்கும்  'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் இந்தியாவில் வருகிற டிசம்பர் 16 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான  “அவதார்”  திரைப்படம் உலக அளவில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து  உருவான அவதாரின் இராண்டாம் பாகத்திற்கு  “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. 


 






ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும்  துயரங்கள், தொடர்ந்து அவர்கள் பெறும் வெற்றி ஆகியவையே இந்தப்படத்தின் கதைக்களமாக அமைந்துள்ளது. 


செப்டம்பர் 23 ஆம் தேதி முதல் பாகம் ரீ ரிலிஸ் 


ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகிய பலர்  நடித்துள்ளனர். பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், ஸ்டுடியோ "அவதார்" முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுவது குறிப்பிடத்தக்கது.