மலையாளத்தில் த்ரிஷ்யம், தமிழில் பாபநாசம். மலையாளத்தில் மோகன்லால், தமிழில் கமல். மலையாளத்தில் மீனா, தமிழில் கவுதமி. கதாபாத்திரங்கள் மாறினாலும் வெற்றியில் மாறாத திரைப்படம் த்ரிஷ்யம்... இல்லை இல்லை பாபநாசம். படத்தில் திரைக்கதை, பரபரப்பு, சஸ்பென்ஸ் இதை கடந்து பேசப்பட்டது ஒன்று தான். ஆகஸ்ட் 2. இன்றும் ஆகஸ்ட் 2 தான். அதென்ன ஆகஸ்ட் 2? சுயம்பு லிங்கத்தின் குடும்பம் தியானத்திற்குச் சென்ற தினம் தான் ஆகஸ்ட் 2. இல்லை... இல்லை... சென்றதாக கூறப்பட்ட தினம் தான் ஆகஸ்ட் 2. ஒட்டுமொத்த கதையையும் கட்டுக்குள் வைத்த ஆகஸ்ட் 2ம் தேதியை படம் வெளியான நாளிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் மீம்ஸ் போட்டு கொண்டாடி வருகிறார்கள் ரசிகர்கள். 




தன் மகளின் மானத்தை காப்பாற்ற சுயம்புலிங்கமும்(கமல்), அவரது மனைவியும் ஒரு கொலையை செய்து அதை  மறைத்து ஆடிய நாடகத்திற்கு வடிவம் கொடுத்த தேதி ஆகஸ்ட் 2. ஒரு படம் வெளியான நாளை கொண்டாடலாம், ஒரு படம் வெளியாவதாக அறிவித்த நாளை கூட கொண்டாடலாம். ஒரு படத்தின் கதாபாத்திரம் உபயோகித்த நாளை கொண்டாடுகிறார்கள் என்றால், அது பாபநாசம் படத்தில் வரும் ஆகஸ்ட் 2 மட்டுமே .


சுயம்புலிங்கத்தின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் மீம்ஸில் சிக்க வைத்த ஆகஸ்ட் 2, இன்று மீண்டும் வந்துள்ளது. ஒவ்வொரு  ஆண்டைப் போல இந்த ஆண்டும், ஆகஸ்ட் 2 மீம்ஸ்கள் வரலாம். மலையாளம் த்ரிஷ்யம் ஆகஸ்ட் 2யை கடந்து, த்ரிஷ்யம் 2யே வெளியாகிவிட்டது. ஆனால் பாபநாசம் இன்னும் அதே பழைய ஆகஸ்ட் 2 உடன் பயணத்தை தொடர்ந்து கொண்டிருக்கிறது. விரைவில் பாபநாசம் 2 வரலாம் என்கிற பேச்சு ஒருபுறம் இருந்தாலும், அந்த 2 வருகிறதோ... இல்லையோ.... அதுவரை ஆகஸ்ட் 2வை விட மாட்டோம் என கெட்டியாக பிடித்துக் தொங்கிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா ரசிகர் வட்டாரம். ஆகஸ்ட் 2 ல் தியானத்திற்குச் சென்ற(சென்றதாக கூறப்பட்ட) சுயம்புலிங்கம்... சம்மந்தப்பட்ட வழக்கில் இருந்து முழுமையாக மீண்டாரா... தன் குடும்பத்தை காத்தாரா... அதற்கு எது மாதிரியான யுக்திகளை கையாண்டார்...  அதிலிருந்து ஆகஸ்ட் 2 மாதிரி ஏதாவது ஒரு கண்டண்ட் கிடைக்காதா என ஏங்கி காத்திருக்கிறது ரசிகர் கூட்டம். அதுவரை ஆகஸ்ட் 2யை அட்மிட் பண்ணவும், பாபநாசம் 2 வெளியானதும், ஆகஸ்ட் 2யை டிஸ்சார்ஜ் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கடந்த காலங்களில் பாபநாசம் சுயம்புலிங்கத்தின் தியானம் பற்றி மீம்ஸ்கள் இதோ..