என்னதான் வாரிசு நடிகராக இருந்தாலும் தனக்கான அங்கீகாரம் கிடைக்க தொடர்ந்து போராடி வருபவர் நடிகர் சிபி ராஜ் . அவ்வபோது சில ஹிட் படங்களை கொடுத்து வரும் இவர் ,தற்போது கிஷோர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘மாயோன்’ திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். மாயோர் திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. புதையல் நிறைந்த கோயில் அதனை சுற்றியிருக்கும் மர்மங்கள் , அந்த மர்ம முடிச்சுகளை ஆராய செல்லும் கதாநாயகன் மற்றும் குழுவினர் என்னும் ஃபேண்டஸி கதைதான் மாயோன். சமீபத்தில் இந்த படத்தில் டீஸ்ர் வெளியாகி மெய்சிலிர்க்க வைத்தது.அது மாற்று திறனாளிகளும் புரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அந்த டீஸர் மாற்றுத்திறனாளிகளும் புரிந்துக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டிருப்பதை விளக்கிய , படத்தின் தயாரிப்பாளர் அருண் மொழி மாணிக்கம் . சர்வதேச மாற்றுத்திறனாளிகளுக்கான வாழ்த்தை தெரிவித்துள்ளார்.இது குறித்து வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் ”''நாங்கள் எப்போதும் நினைவாற்றலையும் உள்ளடக்கிய கலாச்சாரத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கிறோம். இதன் காரணமாக 'மாயோன்' படத்தின் டீசரை பார்வை திறன் சவால் உள்ள மாற்றுத்திறனாளிகளும் உணர்ந்து கொள்ளும் வகையில் பிரத்யேக ஒலி குறிப்புடன் உருவாக்கி வெளியிட்டிருக்கிறோம். மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தின வாழ்த்துக்கள்!. என பதிவிட்டிருக்கிறார்.
மாயோன் படத்தை டபுள் மீனிங் புரடக்ஷன் சார்பில் அருண் மொழி மாணிக்கம் தயாரித்து வருகிறார். மேலும் படத்திற்கான திரைக்கதையையும் அருண் மொழி மாணிக்கமே எழுதியுள்ளார். மாயோன் படத்திற்கு இசைஞானி இளையாராஜா இசையமைத்துள்ளார். இது படத்திற்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. படத்தில் சிபிராஜுக்கு ஜோடியாக தன்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார் ராதாரவி, கேஎஸ் ரவிக்குமார், பகவதி பெருமாள், உள்பட பலர் நடித்துள்ளனர். ராம் பிரசாத் மாயோன் படத்திற்கு ஒளிப்பதிவும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. சிபிராஜ் அடுத்ததாக வினோத் டி.எல் இயக்கத்தில் , விஜய் கே செல்லய்யா தயாரிப்பில் ‘ரங்கா’ படத்தில் நடித்து வருகிறார். அதே போல தரணிதரன் இயக்கத்தில் ‘ரேஞ்சர் என்னும் படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படம் காட்டுக்குள் நடக்கும் கிரைமை மையப்படுத்தி உருவாகவுள்ளது.