மணிரத்னம் முதல் ஷங்கர் வரை ஃபளாப் படங்கள் கொடுக்காத இயக்குநர்களே இல்லை. இந்த பட்டியலில் ஒரு சில இயக்குநர்கள் மட்டும் விதிவிலக்கு என்று சொல்லலாம். ப்ளாப் படங்கள் கொடுக்காததால் இவர்கள் வழக்கமான கமர்ஷியல் படங்களை எடுத்து தப்பித்துக் கொண்டவர்களும் இல்லை. தமிழ் சினிமாவின் கதைசொல்லும் முறையிலும் பேசும் அரசியலிலும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர்கள். அந்த வகையில் இதுவரை ஒரு ஃபளாப் படம் கூட ஃப்ளாப் கொடுக்காத நான்கு இயக்குநர்களைப் பார்க்கலாம்
வெற்றிமாறன்
தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானவர் வெற்றிமாறன். முதல் படம் கமர்ஷியலாக எடுக்க வேண்டும் என்கிற நிர்பந்தம் அனைத்து இயக்குநருக்கும் இருக்கும். ஆனால் அந்த கமர்ஷியல் படத்தில் புதிதாக என்ன கதை சொல்ல முடியும் என்பதை முயற்சித்து பார்த்தவர் வெற்றிமாறன். முதல் படத்தின் வெற்றிக்குப் பின் அதே பாதையில் செல்லாமல் ஆடுகளம் என்கிற படத்தை இயக்கினார். தமிழ் சினிமாவின் இத்தனை ஆண்டுகளில் வெளியான தலைசிறந்த படங்களில் ஒன்றாக ஆடுகளம் படத்தை குறிப்பிடலாம். நாம் செல்லும் ஒரு பாதையில் வெற்றி கிடைத்தால் அதே பாதையை பின்பற்றி செல்வது தான் எந்த ஒரு மனிதருக்கும் இயல்பான தேர்வாக இருக்கும் . தனது முந்தைய இரு படங்களுக்கு எந்த வித தொடர்பும் இல்லாமல் விசாரணை படத்தை இயக்கி சர்வதேச அங்கீகாரம் பெற்றார். தொடர்ந்து வடசென்னை , அசுரன் , விடுதலை என தமிழ் சினிமாவின் கதைக்களத்தையே மாற்றிய வெற்றிமாறன் இதுவரை தொட்டது எல்லாம் தங்கம் தான்
அட்லீ
ராஜா ராணி படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானர் அட்லீ. தொடர்ந்து இரண்டாவது , மூன்றாவது , நான்காவது என அடுத்தடுத்து விஜயின் மூன்று ப்ளாக்பஸ்டர் வெற்றிப்படங்களை இயக்கினார். கடந்த ஆண்டு இந்தியில் ஷாருக் கானின் ஜவான் படத்தை இயக்கி 1000 கோடி வசூல் கொடுத்தார். அட்லீ படங்களின் மீது பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் கமர்ஷியலாக ஒரு படத்தின் வெற்றியை சொல்லி அடிக்கும் திறமை அட்லீக்கு அல்வா சாப்பிடுவது போல் ஆகிவிட்டது.
லோகேஷ் கனகராஜ்
ஒரு பக்கம் வெற்றிமாறன் மண் சார்ந்த கதைகளை கொண்டு வந்தார். இன்னொரு பக்கம் அட்லீ கமர்ஷியல் படங்களின் வழியாக வசூல் ரீதியிலான வெற்றியைக் கொடுத்தார். கமர்ஷியல் படங்களில் சின்ன சின்ன புதுமைகளை செய்து அதை வசூல் ரீதியாகவும் வெற்றிக்கொடுத்தவர் தான் லோகேஷ் கனகராஜ். மாநகரம் படத்தில் தொடங்கிய லோகேஷ் கனகராஜ் கைதி , மாஸ்டர் , விக்ரம் , லியோ தற்போது கூலி என தனக்கென ஒரு தனி சினிமேட்டிக் யுனிவர்ஸையே உருவாக்கிவிட்டார்
மாரி செல்வராஜ்
சமீப காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு இயக்குநர்களில் ஒருவர் மாரி செல்வராஜ். திருநெல்வேலியைச் சேர்ந்த ஒரு சிறு கிராமத்தில் இருந்து சென்னைக்கு ஓடிவந்த மாரி செல்வராஜ் நம்மிடம் சொல்வதற்கு இன்னும் ஏராளமான கதைகள் இருக்கின்றன. பரியேறு பெருமாள் , கர்ணன் , மாமன்னன் , தற்போது வாழை என அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து வரும் மாரி செல்வராஜ் அடுத்தபடியாக பைசன் படத்தை இயக்கி வருகிறார்.