நடிகர் ஷாருக்கான் நடித்துள்ள ஜவான் படத்தின் இரண்டாம் நாள் வசூல் நிலவரம் தொடர்பான தகவல்கள் வெளியாகி இந்திய திரையுலகை அதிரச் செய்துள்ளது. 


ஜவான்


இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அட்லீ, தமிழில் ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்களை இயக்கி கோலிவுட்டின் முன்னணி கமர்ஷியல் இயக்குநராக உயர்ந்தார். தொடர்ந்து பாலிவுட் சென்ற அவர், நடிகர் ஷாருக்கானை வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். ரெட் சில்லி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோனே, யோகிபாபு, சஞ்சய் தத், பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி உலகமெங்கும் 10 ஆயிரத்துக்கும் அதிகமாக தியேட்டர்களில் வெளியானது. 


முன்னதாக ஜவான் படத்தின்  ட்ரெய்லர்கள், பாடல்கள்  மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. இதனால் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. டிக்கெட் முன்பதிவிலும் இதுவரை இல்லாத அளவுக்கு சாதனை படைத்தது. 5 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்பட்டது. இப்படியான நிலையில் செப்டம்பர் 7-ஆம் வெளியான ஜவான் படம் இந்தி சினிமா ரசிகர்களுக்கு கமர்ஷியல் ட்ரீட் ஆக அமைந்துள்ளது.


உலகளாவிய வசூல்


ஜவான் திரைப்படம் வெளியான முதல் நாளில் வசூல் வேட்டையைத் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து இரண்டு நாட்களில் ரூ 240 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்தது


இந்திய வசூல்






இந்தியாவைப் பொறுத்தவரை ஜவான் திரைப்படம் முதல் நாளாக ரூ.64 கோடிகளும்  இரண்டாவது நாளாக, ரூ. 47 கோடிகளும் , மூன்றாவது நாளாக ரூ.66 கோடிகளையும் வசூல் செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக இந்திய அளவில் மூன்று நாட்களில் மொத்தம் ரூ 177 கோடிகளை ஜவான் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.


முதல் வார வசூல் கணிப்புகள்


ஜவான் திரைப்படத்திற்கு இருக்கும் அமோக வரவேறை வைத்து முதல் வார இறுதி அதாவது மொத்தம் நான்கு நாட்களில் உலகளவில் மொத்தம் ரூ 500 கோடிகளை ஜவான் வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை வெறும் நான்கு நாட்களில் இந்த இலக்கை தொட்ட படங்கள் என்றால் பாகுபலி 2. கே.ஜி.எஃப் 2 , ஆர்,ஆர்,ஆர், மற்றும் ஷாருக்கான் நடித்த பதான். இத்துடன் நான்கு நாட்களில் 500 கோடி வசூல் செய்த ஒரே நடிகரின் இரண்டு படங்கள் என்றால், அது ஷாருக்கம் படம்தான்.