‘அரபிக் குத்து’ பாடலுக்கு தனது மனைவியுடன் சேர்ந்து அட்லீ ஆடி டான்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக இருப்பவர் விஜய். இவரது நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருக்கும் திரைப்படம் பீஸ்ட். இந்தப்படத்தின் போஸ்டர்கள், ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், அண்மையில் படத்திலிருந்து ஃபர்ஸ்ட் சிங்கிளான அரபிக்குத்து லிரிக்கல் பாடல் வெளியானது. வெளியான நாளில் இருந்து தற்போது வரை பல சாதனை இப்பாடல் படைத்து வருகிறது.


இந்தப்பாடலில் வருவது போலவே, பலரும் நடனமாடி வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியும் வருகிறது. தற்போது, இயக்குநர் அட்லீ தனது மனைவி பிரியாவுடன் சேர்ந்து அரபிக்குத்து பாடலுக்கு டான்ஸ் ஆடினார். அவர்களுடன் சேர்ந்து பிரபல கலை இயக்குநர் டி. முத்துராஜூம் நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோவை பிரியா அட்லீ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வைரலாகி வரும் வீடியோவுக்கு லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.


வீடியோ:


 






முன்னதாக,  பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே, இசையமைப்பாளர் அனிருத், நடிகை சமந்தா உள்ளிட்டோர் இந்தப் பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோவை வெளியிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண