இயக்குநர் அட்லியின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில், பிகில் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இயக்குநர் ஷங்கரின் நண்பன் மற்றும் எந்திரன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணிபுரிந்த அட்லி, ராஜா ராணி படத்தில் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இப்படத்தில் நயன் தாரா, ஆர்யா, ஜெய், நஸ்ரியா ஆகிய பிரபலங்கள் நடிக்க, லவ் செண்டிமெண்ட் நன்றாக வொர்க்-கவுட் ஆகியது.
இதனால், அறிமுகமான முதல் படத்திலேயே புகழின் உச்சியை தொட்டார். இந்த படத்திற்காக, சிறந்த வசனகர்த்தா , சிறந்த அறிமுக இயக்குநர் ஆகிய பல விருதுகளையும் குவித்தார். அதற்கு பின், நடிகர் விஜயுடன் இணைந்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று வெற்றி படங்களை இயக்கினார். உதவி இயக்குநராக இருந்த இவர், தற்போது முன்ணனி இயக்குநராக வளம் வரும் சமயத்தில் பாலிவுட் சினிமாவிலும் கால் தடம் பதிக்க சென்று விட்டார். ஆம், நடிகர் ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கி வருகிறார் அட்லி.
இவரை, காபி கேட் அட்லி , இவர் கதையை எங்கேயோ சுட்டுருக்கிறார் என பலர் ட்ரால் செய்தாலும் இவர் கதையில் உருவான மெர்சல் வெற்றிமாறன் மற்றும் பிகில் ராயப்பன் ஆகிய கதாப்பாத்திரங்களை யாராலும் தவிர்க்கவே முடியாது.
தற்போது, பிறந்த நாள் காணும் இயக்குநர் அட்லி ட்ரெண்டாகி வருகின்றார். வழக்கமாக விஜயை ட்ரெண்ட் செய்து வரும் இளைய தளபதி ரசிகர்கள் இயக்குநரின் பிறந்தநாளையொட்டி தளபதி 68 என்ற பெயரில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
அதுபோல், பிகில் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட டப்ஸ் மாஷ் வீடியோவும் இணையத்தில் லீக்கானது. அந்த வீடியோ அதிகமாக பகிரப்பட்டு, வைரலாகி வருகிறது. அதுபோக, லோகேஷ் கனராஜின் தளபதி 67 குறித்து எந்த அதிகாரபூர்வமான தகவலும் வராத நிலையில், தளபதி 68 படத்தை டைரக்டர் அட்லி இயக்கவுள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது