கோலிவுட்டின் காதல் பறவைகள் நடிகை நயன்தாரா - இயக்குநர் விக்னேஷ் சிவன் திருமணம் முன்னதாக மகாபலிபுரத்தில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.
வாழ்த்த வந்த பிரபலங்கள்
இத்திருமணத்தில் நயன் - விக்னேஷ் குடும்பத்தார் தவிர பிரபல திரைப்பிரபலங்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பாலிவுட் சூப்பர் ஸ்டார்ஷாருக் கான், தயாரிப்பாளர் போனிகபூர், நடிகர்கள் சூர்யா, விஜய் சேதுபதி, நடிகை சுஹாசினி, நடிகர் ரெடின் கிங்ஸ்லி, தொகுப்பாளர் தேவதர்ஷினி, நடன இயக்குநர் கலா, பாடகர் அனிருத் தந்தை ரவிச்சந்தர் உள்ளிட்ட பலரும் நேரில் வாழ்ந்து வாழ்த்தினர்.
ஷாருக்கானுடன் வருகை தந்த அட்லீ
நயன் தாரா ஏற்கெனவே அட்லியின் ராஜா ராணி, தெறி உள்ளிட்ட படங்களில்ள்ள நிலையில், தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில், ஷாருக்கானுடன் ஜவான் இந்தி திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், ஷாருக், அட்லீ இருவரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தில் பங்கேற்கும் முன் எடுத்த ஃபோட்டோ வைரலாகியுள்ளது. ஷாருக்கானும் அட்லியும் இந்த இந்திய பாரம்பரிய உடைகளுள் ஒன்றான ஷெர்வானி அணிந்து இந்த ஃபோட்டோவில் குஷியாக போஸ் கொடுத்துள்ளனர்.
நயன் - விக்னேஷ் சிவன் திருமணத்தை முன்னிட்டு தனியார் பாதுகாப்பு பணி நிறுவன ஆட்களாகிய பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பிரபலங்கள், நெட்டிசன்கள் எனப் பலரும் வாழ்த்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது.
போடாபோடி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான விக்னேஷ் சிவன் தொடர்ந்து நயன்தாரா, விஜய்சேதுபதி நடித்த ‘நானும் ரெளடிதான்’ படத்தை இயக்கினார். இந்தப்படத்தின் போது நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்த நிலையில் சுமார் ஆறு ஆண்டு காலத்துக்குப் பிறகு இன்று திருமணம் நடக்கிறது.
மேலும் படிக்க: ஆண்டவரே, நீ ஏத்தி பாடு… 200 கோடி கிளப்பில் இணைந்தது விக்ரம்! 500 கோடி டார்கெட்டாம்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்