நடிகர் முரளியின் மகன் அதர்வா பானா காத்தாடி படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். ரொமாண்டிக் , ஆக்‌ஷன் கதாபாத்திரங்களில் நடித்து வரும் அதர்வா தற்போது சுதா கொங்காரா இயக்கும் பராசக்தி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை டான் பிக்ச்சர்ஸ் தயாரித்து வருகிறது. டான் பிக்ச்சர்ஸ் தயாரிக்கும் மற்றொரு படமான இதயம் முரளி படத்தில் அதர்வா நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தின் டைட்டில் டீசர் சமீபத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படத்தின் முதல் பாடல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

இதயம் முரளி முதல் பாடல்

டான் பிக்ச்சர்ஸ் சார்பாக இப்படத்தை தயாரிக்கும் ஆகாஷ் பாஸ்கரன் இப்படத்தை இயக்குகிறார்.  ப்ரீத்தி முகுந்தன், நட்டி சுப்ரமணியம், நிஹாரிகா என்.எம், தமன் எஸ், ரக்ஷன், பிரக்யா நாக்ரா மற்றும் சுதாகர் ஆகியோருடன் அதர்வா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். தமன் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'இதயா' தற்போது வெளியாகியுள்ளது. விவேக் இந்த பாடலை எழுதியுள்ளார். விஷால் மிஷ்ரா இந்த பாடலை பாடியுள்ளார்.

இதயா பாடல் வரிகள்

இதயா...நீ காதல் விதையா

உன் மனம் எழுதிடும் கதை கதையா...

யாராரீ

யாத்திரி

யாரோ நீ

யாத்திரி...