நடிகை அம்மு அபிராமி மகேந்திரா தார் ஜீப் உடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று சமூகவலைதளத்தில் வைரலாகி வருகிறது.


ராட்சசன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அம்மு அபிராமி. அந்த படத்தில் விஷ்ணு விஷாலின் அக்கா மகளாக நடித்து ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தார். அதன்பிறகு, அசுரன் படத்தின் தனுஷுக்கு ஜோடியாக நடித்து தனது சினிமா கேரியரில் அடுத்தக்கட்டத்திற்கு சென்றார். இந்த இரண்டு படங்களிலும் அவர் இறந்துவிடுவது போலவே கதாபாத்திரம் அமைந்திருக்கும். அதனைத்தொடர்ந்து, கார்த்தியின் தம்பி, மணிரத்னம் தயாரிப்பில் உருவாகிய நவரசா படங்களில் நடித்தார். தற்போது, ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் யானை படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அந்தப் படத்தின் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துகொண்டார் அபிராமி அம்மு.


 






இந்த நிலையில், மகேந்திராவின் புதிய தார் ஜீப்பை வாங்கியுள்ளார். அந்த ஜீப்பிற்கு பூஜை செய்தபின் கோயில் அருகில் எடுத்த புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். இதனைதொடர்ந்து அம்மு அபிராமிக்கு பலரும் வாழ்த்து கூறி வருகின்றார்கள். மேலும், இந்த கார் வாங்கியது தொடர்பான ஒரு குட்டி ஸ்டோரியையும் அம்மு அபிராமி  எழுதியுள்ளார். அதில் தனது காரான ஒருமுறை சாலையில் பார்த்ததாகவும், கார் வாங்கினால் இதைத்தான் வாங்க வேண்டும் என அப்போதே முடிவு எடுத்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


 






 


மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...


 


ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண