கடந்த ஓராண்டாக புற்றுநோயால் போராடி வந்த பிரபல அஸ்ஸாம் நடிகர் கிஷோர் தாஸ் சென்னையில் நேற்று (ஜூலை.02) உயிரிழந்தார்.
30 வயது நிரம்பிய நடிகர் கிஷார் தாஸ் முன்னதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும் அவரது மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இறுதிச் சடங்கு
சென்னையில் பிரபல தனியார் மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெற்று வந்த கிஷோர் நேற்று உயிரிழந்ததைத் தொடர்ந்து அவரது இறுதி சடங்குகளும் சென்னையிலேயே நடைபெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இளம் வயதில் சினிமாவில் வளர்ந்து வரும் நிலையில், கிஷோர் தாஸ் உயிரிழந்தது அவரது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ரசிகர்கள் சமூக வலைதளங்களில் இரங்கல்
முன்னதாக கீமோதெரப்பியை அடுத்து தன் உடல் மோசமடைந்திருப்பதாக கிஷோர் பகிர்ந்த புகைப்படம் மற்றும் பிரபல புகைப்படக் கலைஞர் பயானி பகிர்ந்த புகைப்படங்களில் கிஷோரின் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து காமெண்ட் செய்து வருகின்றனர்.
அஸ்ஸாம் மாநிலத்தின் பெரும் நகரான கௌஹாத்தியை மையமாகக் கொண்ட தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பட்டு வந்த பிரபல தொடர்களின் மூலம் கிஷோர் தாஸ் முதலில் பிரபலமடைந்தார்.
300க்கும் மேற்பட்ட பாடல்கள்
300க்கு மேற்பட்ட இசை வீடியோக்களில் பணியாற்றியுள்ள கிஷோர், தாதா துமி டஸ்டோ போர் என்ற அஸ்ஸாமிய படத்தில் இறுதியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், வட இந்தியாவில் முன்னதாக பிரபல பாடகர் சித்து மூஸ் வாலா, கேகே உள்ளிட்டோரைத் தொடர்ந்து தற்போது கிஷோர் உயிரிழந்துள்ளது சினிமா ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது