Ashok Selvan: போர் தொழில் இயக்குநருடன் அடுத்த ரவுண்ட்: ரொமான்ஸ் மறுபக்கம்: வரிசைகட்டும் அசோக் செல்வன் படங்கள்!

போற் தொழில் படத்தின் இயக்குநருடன் இரண்டாவது முறையாக அசோக் செல்வன் இணைய இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது

Continues below advertisement

போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement

போர் தொழில்

தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன்.  சமீபத்தில் இவர் நடித்த ப்ளூ ஸ்டார் திரைப்படம் வெளியாகி சிறப்பான வெற்றி பெற்றது. அசோக் செல்வன் நடித்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான போர் தொழில் படம் அவரது கரியரில் முக்கியமான படமாக அமைந்தது. இந்தப் படத்தில் அவருடன் சரத்குமார் இணைந்து நடித்திருந்தார். அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இந்தப் படத்தை இயக்கினார். கடந்த ஆண்டு அறிமுக இயக்குநர்கள் இயக்கி மிகப்பெரிய வெற்றிபெற்ற படங்களில் இந்தப் படமும் ஒன்று.

விஷ்ணு விஷால் நடித்து ராம்குமார் இயக்கத்தில் வெளியான ராட்சசன் படத்திற்குப் பின் குறிப்பிட்டு சொல்லும் வகையிலான நல்ல த்ரில்லர் படம் வெளியாகவில்லை. இப்படியான நிலையில் வெளியான போர் தொழில் ராட்சசன் படம் ஏற்படுத்திய அதே தாக்கத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. கூடுதலாக இப்படம் சைக்கோ கொலைகாரர்களை வெறும் கொலைகாரர்களாக மட்டும் சித்தரிக்காமல், அவர்களின் உளவியலை புரிந்துகொள்ள ஒரு சிறு முயற்சியையும் எடுத்தது. தற்போது அசோக் செல்வன் அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில், போர் தொழில் படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜாவுடன் அவர் மீண்டும் இணைய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

போர் தொழில் 2 ?

இந்தப் படம் குறித்த அதிகாரப்பூர்வமான தகவல் விரைவில் வெளிடப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. போர் தொழில் படத்தின் இரண்டாம் பாகமாக இந்தப் படம் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எமக்கு தொழில் ரொமான்ஸ்

அசோக் செல்வன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘எமக்கு தொழில் ரொமான்ஸ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப் பட்டுள்ளது.  அறிமுக இயக்குநர் பாலாஜி கேசவன் இந்தப் படத்தை இயக்குகிறார். அவந்திகா மிஷ்ரா  நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் எம்.எஸ்.பாஸ்கர், ஊர்வசி, அழகம்பெருமாள், பகவதி பெருமாள், விஜய் வரதராஜ், படவா கோபி உள்ளிட்டவர்கள் இணைந்து நடிக்கிறார்கள். நிவாஸ் கே பிரசன்னா இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.  டி கிரியேஷன்ஸ் சார்பில் எம் திருமலை இந்தப் படத்தை தயாரித்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

 
Continues below advertisement
Sponsored Links by Taboola