அசோக் செல்வன் நடிக்கும் நித்தம் ஒரு வானம் படத்தின் டீசர் வெளியாகியது.தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நடிகர்களில் மிகவும் முக்கியமானவர் அசோக் செல்வன். பில்லா 2ம் படத்தில் இளவயது அஜீத்தாக நடித்து திரையுலகில் அறிமுகமானவர். சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி என வித்தியாசமான கதையம்சம் உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வந்தவர். கடந்த 2020ம் ஆண்டு வெளியான ஓ மை கடவுளே படம் மூலமாக மிகவும் பிரபலமானார்.ஓ மை கடவுளே வெற்றிக்கு பிறகு அசோக் செல்வன் மாறுபட்ட கதையம்சம் கொண்ட திரைப்படங்களில் நடித்து வருகிறார். வெங்கட்பிரபு இயக்கத்தில் அவர் நடித்த மன்மதலீலை திரைப்படம் அவருக்கு கலவையான விமர்சனத்தை பெற்றுத்தந்தது.






தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் அசோக்செல்வன் தற்போது அறிமுக இயக்குனர் கார்த்திக் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார். இந்த படத்தை எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் சார்பில் மதன் தயாரித்துள்ளார். இப்படத்தில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் நடிகை ரித்து வர்மா, சூரரைப்போற்று புகழ் அபர்ணா பாலமுரளி, சிவ ஆத்மிகா ஆகிய மூன்று கதாநாயகிகள் ஆகியோர் நடித்துள்ளனர்.






ஜூன் 8 ஆம் தேதி அன்று இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. அந்த டீசரை பார்த்தவுடன், மூன்று ஹீரோயின்களையுடன் மாற்றி மாற்றி காதல் செய்யும் கதாப்பாத்திரமாக அசோக் வளம் வருவார் என்று தோன்றுகிறது. ஆனால், மன்மத லீலையில் வரும்  ரொமான்ஸ் போல் இது இருக்காது. 90’s கிட்ஸ்களின் உண்மை காதல் போல் இருக்கும். ஒரு வார்த்தையில் சொல்லப்போனால் 96 பட சாயல் இதில் உள்ளது. போஸ்டரை போல, டீசருக்கு எந்த குறையும் இல்லை. பல்வேறு லொக்கேஷன்களில் படப்பிடிப்புகள் நடத்தபட்டதால், டீசரை போன்று படமும் கலர்ஃபுல்லாக அமையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.


 


மேலும் படிக்க : விஜய் சாருக்கு கதை சொன்னேன்... அவருக்கு பிடிக்கவில்லை’ -கார்த்திக் சுப்பராஜ் பேட்டி! 


Pandian Stores : 1000 எபிசோடுகளை தாண்டிய ‛பாண்டியன் ஸ்டோர்ஸ்‛ வெற்றி விழா கொண்டாட்டம்!