பிற நாடுகளில் வாழும் இந்தியர்கள் பார்க்கும் வகையில் ப்ளூ ஸ்டார் படம் பிரபல ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.


ப்ளூ ஸ்டார்


அறிமுக இயக்குநர் ஜெய்குமார் இயக்கத்தில் உருவான படம் ப்ளூ ஸ்டார். கடந்த ஜனவரி 25ஆம் தேதி வெளியானது. அசோக் செல்வன், சாந்தனு , கீர்த்தி பாண்டியன், ப்ரித்வி உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். கோவிந்த் வசந்தா இசையமைத்து பா.ரஞ்சித் இந்தப் படத்தை வழங்கியுள்ளார்.


கிரிக்கெட்டை மையமாக வைத்து சாதிய பாகுபாட்டை பேசிய ப்ளூ ஸ்டார் படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் சிறப்பான வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடும் வகையில் இப்படத்தின் வெற்றி விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் சாந்தனு மற்றும் நடிகர் பாண்டியராஜனின் மகனான ப்ரித்வி உள்ளிட்டவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசினார்கள்.


“எனக்கு வெற்றி கிடைக்காத ஏக்கம் என்னுடைய அப்பா அம்மாவுக்கு இருந்தது. ப்ளூ ஸ்டார் படத்தின் வெற்றி அவர்களின் முகத்தில் ஒரு சிரிப்பைக் கொண்டு வந்திருக்கிறது. எனக்கு இதைவிட பெரிய பரிசு எதுவும் இல்லை” என்று சாந்தனு உருக்கமாக பேசினார். கிரிக்கெட்டில் சாதிய பாகுபாட்டை மையமாக வைத்து உருவான இப்படத்தில்  நடிப்பு, இசை, வசனம், காதல் காட்சிகள், காமெடி என எல்லா அம்சங்களும் ரசிகர்களை கவர்ந்தது. 


 


ஓடிடி ரிலீஸ்






இன்றுடன் திரையரங்கில் 25ஆவது நாளை எட்டியுள்ளது ப்ளூ ஸ்டார் படம். இந்நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த ஓடிடி ரிலீஸ் இந்திய ரசிகர்களுக்கு இல்லை. பிற நாடுகளில் வசிக்கும் இந்தியவர்கள் தங்கள் மொழிப் படங்களைப் பார்க்கும் விதமாக உருவாக்கப்பட்ட ஓடிடி தளம் டென்ட் கொட்டா. இந்தியாவைத் தவிர்த்து பிற நாடுகளில் வசிக்கும் மக்கள் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிப்படங்களை இந்த தளத்தில் பார்க்கலாம். அந்த வகையில் ப்ளூ ஸ்டார் வரும் பிப்ரவரி 23ஆம் தேதி இந்தத் தளத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் இந்தியாவில் ப்ளூ ஸ்டார் படம் வெளியாகும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




மேலும் படிக்க : Ethirneechal: ஜனனி கேட்ட கேள்விக்கு ஆடிப்போன குணசேகரன்: சொத்தைப் பிடுங்க போட்ட பிளானா? எதிர்நீச்சலில் இன்று!


D50 First Look : தனுஷின் சம்பவம் லோடிங்... இன்று மாலை D50 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பார்க்க காத்திருங்கள்!