ஆஷாஜியின் இன்னொரு முகம் பத்தி தெரியுமா...இசைப்பிரியர்களே உடனே பாருங்க...


வட இந்தியாவில் இருந்து வந்த எத்தனையோ பாடகர்களில் ஒரு இனிய குரலுக்கு சொந்தக்காரர் ஆஷா போஸ்லே. ஆஷாஜி என இசைப் பிரியர்களால் மிகவும் செல்லமாக அழைக்கப்படும் போஸ்லேவுக்கு இன்றும் அந்த இனிய குரலில் எந்த ஒரு மாற்றமும் இல்லை. 



ஆஷாஜி குரலில் நாம் கேட்டு ரசித்த தமிழ் பாடல்கள் :


ஆஷாஜியின் உலகெங்கிலும் ரசிகர்கள் உள்ளனர். பத்திற்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். தமிழில் அவர் பாடிய பாடல்களை வரலாறு பேசும் அளவிற்கு பதிவிட்டுள்ளார். நமது தமிழ் சினிமாவில் முதன் முதலில் இசைஞானி இளையராஜாவின் இசையில் 1987-ம் ஆண்டு வெளியான ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’ படத்தில் "செண்பகமே…செண்பகமே…’ எனும் முதல் பாடலிலேயே மிகவும் பிரபலமானவர். அதனை தொடர்ந்து ‘ஓ…பட்டர்பிளை…’, ‘எங்க ஊரு காதலைப் பத்தி…’,‘எங்கெங்கே…எங்கெங்கே...’, ‘வெண்ணிலா…’,  ‘ நீ பார்த்த பார்வைக்கொரு நன்றி…’,‘செப்டம்பர் மாதம்…’, ‘கொஞ்ச நேரம்… கொஞ்ச நேரம்...’, என அவர் தமிழ் சினிமாவில் பாடிய அதனை பாடல்களும் சூப்பர் ஹிட் பாடல்கள். இன்றும் நம் அனைவரின் காதுகளிலும் இனிமையை ஒலிக்கும் அந்த குரலுக்கு சொந்தக்காரரான ஆஷா போஸ்லே நம் மனதில் தன் குரல் மூலம் என்றும் நீங்காமல் இருப்பார். 


சமையலிலும் கெட்டிக்காரர் ஆஷாஜி: 


இந்திய தேசத்தையே கவர்ந்த அந்த குரலுக்கு சொந்தக்காரர்  இசையில் மட்டுமின்றி சமையலிலும் சிறந்து விளங்குபவர் என்பது சிலர் மட்டுமே அறிந்த ஒரு விஷயம். துபாயில் புதிதாக ஒரு உணவகத்தை திறந்துள்ளார். அதற்கு ஆஷா'ஸ் ரெஸ்டாரண்ட் என்று பெயரிட்டுள்ளார். அவரின் இந்த 20 ஆண்டுகள் பழமையான இந்திய உணவகம் உலகெமெங்கும் உள்ளன. அவற்றில் இது புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. சமீபத்தில் ஆஷாஜி அவரின் சமையலறைக்குள் நுழைந்து விருந்தினர்களுக்கு சமைத்து கொடுத்துள்ளார். ஆஷாஜி செஃப்களின் கோட் அணிந்து சமயலறையில் கமாங் தம் பிரியாணி தயாரிப்பதையும், முதிந்ததும் அதை அழகாக அலங்கரித்து வழங்குவதையும் ஒரு வீடியோவாக எடுத்துள்ளனர். அந்த வீடியோவிற்கு பின்னணி இசையாகஆஷா போஸ்லே பாடின ‘ஆவோ நா, கலே லகலோ நா’ பாடல் ஒலிக்கிறது. இந்த வீடியோவை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார் ஆஷாஜி. அதற்கு "துபாயில் உள்ள ஆஷா ரெஸ்டாரண்டில் என்னை சந்திக்கவும்" என்று தலைப்பிட்டுளார்.


இந்த வீடியோ இசையின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் கவந்துள்ளது. அவருக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்த வண்ணம் உள்ளன. நீங்களும் இந்த வீடியோவை பார்த்து இங்கே ரசிக்கலாம்.