ஆர்யாவின் 34-வது படத்தின் ஷூட்டிங்கை,  படக்குழுவினர் பூஜையுடன் துவங்கி வைத்தனர்.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் ஆர்யா. இறுதியாக இவரது நடிப்பில் வெளியான  ‘சார்பட்டா பரம்பரை ‘ டெடி’ ஆகிய இருப்படங்களும் ரசிகர்கள்  மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதற்கு பிறகு, கேப்டன் என்ற கற்பனை நிறைந்த ஆக்‌ஷன் படத்தில் நடித்தார். 


ஏலியன்களுக்கும் ஆர்யாவின் கூட்டத்திற்குமான கதையே கேப்டன். இப்படத்திற்கு பிறகு, இயக்குநர் முத்தையாவுடன் கைக்கோர்த்து, கிராமத்து ஆக்‌ஷன் படத்தில் நடிக்கவுள்ளார். சமீபத்தில் இயக்குநர் முத்தையாவின்  “விருமன்” படம் கலவையான விமர்சனத்தை பெற்றது.






எப்போதும் கிராமத்து கதையை படமாக்கி வருகிறார் என்றும், ஒரே மாதிரியான கதை சலிப்பான உணர்வை கொடுக்கிறது என்று சிலர் கூறினர். முத்தையா எடுத்த விருமன் படம் சில்லி சிக்கனை போல் இருக்கிறது. இதற்கு முன் எடுத்த படம் சிக்கன் 65 போல் இருந்தது. சிக்கன் என்பது ஒன்றுதான் மசாலாதான் வேற என்றும் சிலர் கிண்டல் செய்தனர். ஒரே மாதிரியான கதையை பார்த்து மக்கள் டென்ஷான நிலையில், இப்போது மீண்டும் ஆர்யாவை வைத்து படம் இயக்கவுள்ளார் முத்தையா. இப்படத்தில் ஆர்யாவிற்கு ஜோடியாக, வெந்து தணிந்தது காடு ஹீரோயின் சித்தி இட்னானி நடிக்கவுள்ளார். மியூசிக் டைரக்டர் ஜி.வி.பிரகாஷ் ஆர்யா 34-வது படத்திற்கு இசையமைக்கவுள்ளார். 






ஆர்யா-சித்தி காம்போ வித்தியாசமாக அமையலாம். அதுபோக, மண்வாசனை மிக்க ட்யூன்களை அமைக்கு ஜி.வி பிரகாஷ் இப்படத்திற்கு சூப்பர் மியூசிக் போட்டு அசத்துவார் என்று சில ரசிகர்கள் எதிர்ப்பார்க்கின்றனர். தற்போது, ஆர்யா 34-ன் படக்குழுவினர் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கி வைத்துள்ளனர். பூஜை போட்டோகளும் இணையத்தில் வெளியானது.


மேலும் படிக்க : Thalapathy 67 New Look : நம்ம விஜய்யா இது..? வந்தாச்சு தளபதி 67 நியூ லுக்..? வைரலாகும் படத்தால் ரசிகர்கள் உற்சாகம்.!