சன்டிவியின் பிரபலமான தொடர்களில் ஒன்றான அருவி, அடுத்தடுத்த திரும்பங்களுடன் நகர்ந்து கொண்டிருக்கிறது. தன் அக்காவின் மகள் இருக்கும் போது, அருவியை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார் புகழ். இதனால் தனது அக்கா மற்றும் அக்காவின் மகளின் வஞ்சத்திற்கு ஆளாகிறது புகழ்-அருவி தம்பதி. புகழின் அண்ணன்கள், அண்ணிகள் சாதகமாக இருந்ததால், வீட்டை மீறி நடந்த திருமணத்திற்கு பதிலாக மறு தாலி கட்டி புதிய திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறார்கள்.




அதில் புகழின் அக்கா மற்றும் அக்கா மகள் செய்த சூழ்ச்சியில் திருமணத்தில் பிரச்சனை ஏற்பட்டு, அருவியை அவரது அப்பா வீட்டிற்கு அழைத்துச் செல்கிறார். தங்கள் திட்டம் நிறைவேறிய மகிழ்ச்சியில் காய் நகர்த்துகிறார்கள் புகழின் அக்காவும், அக்கா மகளும். அவர்களின் தவறான வழிகாட்டுதலில், இளைய மருமகள் அருவி மற்றும் அவரது குடும்பத்தார் மீது புகழின் அம்மாவுக்கு கடும் கோபம் ஏற்படுகிறது. 


புகழ் வாழ வேண்டும் என விரும்பும், அண்ணன்கள் மற்றும் அண்ணிகள், அருவி வீட்டிற்கு சென்று அவளை அழைத்து வர முயற்சிக்கின்றனர். ‛உங்கள் அம்மா வந்து அழைத்தால் தான், என் மகளை அனுப்புவேன்’ என கறாராக அடம் பிடிக்கிறார் அருவியின் அப்பா. அழைத்துவர வந்தவர்கள் ஏமாந்து வீடு திரும்ப, தன் அனுமதியில்லாமல் எதிரி வீட்டிற்கு சென்றதற்காக ருத்ரதாண்டவம் ஆடுகிறார் புகழின் அம்மா அம்பிகா. 




ஒரு புறம் புகழ் அம்மாவின் கோபம், மற்றொரு புறம் அருவி அப்பாவின் பிடிவாதம் என இரு குடும்பங்களின் விரிசல், புது மணத் தம்பதிகளை பிரித்திருக்கும் நிலையில், இருவரையும் இணைக்க பாடுபடும் மணமகன் குடும்பத்தாரின் முயற்சிகள் ஒரு பக்கம், என்ன முயற்சி எடுத்தாலும் அதை முறியடித்து மேலும் பிரச்சனைகளை எழுப்ப காத்திருக்கும் புகழ் அக்காவின் தந்திரங்கள் என, இன்றைய எபிசோடும் ‛தகதக’வென பற்றி எரியும் என்கிற நம்பிக்கையில் காத்திருக்கிறார்கள் ரசிகர்கள்!


அருவியின் அப்பாவை சமாதானப்படுத்துவது பெரும்பாடு என்றால், புகழின் அம்மாவை அமைதிப்படுத்துவது அதை விட சவாலாக உள்ளது. வீட்டில் இளைய மகனுக்கு இந்த நிலையா என்று தவிக்கிறார்கள் அண்ணிமார்கள். எப்படியாவது காய் நகர்த்தி, தன் மகளை தம்பி புகழுக்கு திருமணம் செய்து வைக்கலாம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு அதற்காக முழு நேர வேலையை செய்து கொண்டிருக்கும் அக்கா மற்றும் அவருக்கு உதவியாக அனைத்து சதி வேலைகளை செய்து கொண்டிருக்கும் அக்கா மகளின் திட்டங்களை சமாளிப்பது, எஞ்சி இருக்கிற பெருங்கூட்டத்திற்கு பெரிய சவாலாகவே இருக்கும் எனத்தெரிகிறது.