பழம்பெரும் நடிகர் சிவகுமாரின் செல்ல மகன் அருண்விஜய். தவம் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக கோலிவுட்டிற்குள் என்ட்ரி கொடுத்தார் அருண்.கட்டு மஸ்தான உடல், களையான முகம் என எல்லாம் இருந்தும் இவருக்கு ஏனோ, நல்ல பட வாய்ப்புகள் அமையாமல் இருந்தது. இதனால், பல ஆண்டுகளாக தமிழ் திரையுலகில் இருந்தும், இவரால் சட்டென முன்னனி நடிகராக உருவெடுக்க முடியவில்லை. 

Continues below advertisement


கைகொடுத்து தூக்கிவிட்ட என்னை அறிந்தால்!


‘என்னடா வாழ்க்கை இது..’என அவர் தோய்ந்து போய் உட்கார்ந்திருந்த நேரத்தில்தான் இவரைத் தேடி வந்தது, “என்னை அறிந்தால்” எனும் ஜாக்பாட்! கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், அஜித் ஹீரோவாக நடிக்க, அருண் விஜய் முதன் முதலாக வில்லன் அவதாரம் எடுத்தார்.  அதிலும் வழக்கமான ரக்கட் பாய் வில்லன் போல இல்லாமல், அழகான ‘ப்ரேஞ்ச் பியர்ட்’ வைத்த ஸ்டைலிஷ் வில்லனாக வந்தார். விக்டர் என்ற கதாப்பாத்திரத்தில் பேட் பாய் வில்லனாக மிரட்டிய இவரை ரசிகர்கள் அப்படியே ஏற்றுக்கொண்டனர். 


“டேய் விக்டர், இது தான் உன் டைம், விடாத ஓடு..போட்டு தாக்கு” என இவர் என்னை அறிந்தால் படத்தில் பேசிய டைலாக், படத்தின் விக்டர் கேரக்டருக்காக மட்டுமல்ல, இவருக்கும் சேர்த்து தான். இதை அவர் பல பட விழாக்களில் அவரே  விழாக்களில் சொல்வதுமுண்டு. நல்ல படம், நல்ல கதாப்பாத்திரத்திற்காக காத்துக் கொண்டிருந்தவருக்கு, அல்வா போல கிடைத்த வாய்ப்பை நழுவ விடாமல் தக்க வைத்துக்கொண்டார் அருண் விஜய். அதற்கடுத்து இவரது கதவை தட்டிய பட வாய்ப்புகள் ஏராள். என்னை அறிந்தால் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த வரவேற்ப்பை பார்த்து விட்டு,  இனி பொறுமையாக கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் நம்ம அருண்! 


ஹிட் கொடுத்த படங்கள்!


2015 ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு, இவர் நடித்த படங்களுக்கு தமிழ் திரையுலகில் நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக 2017ஆம் ஆண்டு வெளியான, குற்றம் 23 படம் ரசிகர்களுக்கு பிடித்த க்ரைம் திரில்லர் கதையாக அமைந்தது. கட்டு மஸ்தான உடல் அருண் விஜய்யின் ப்ளஸ் பயான்ட்களில் ஒன்று. இதுவே இவருக்கு குற்றம் 23 படத்தில் போலீஸ் ஹீரோவாக நடிக்கவும் உதவி புரிந்தது. 


குற்றம் 23 படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இவர் தேர்ந்தெடுத்து நடித்த சிறந்த திரைப்படம் தடம். இப்படத்தில் இரு வேடங்களில் நடித்து ரசிகர்களுக்கு ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்தார் அருண் விஜய். 


வெற்றிக்கு மேல் வெற்றி, ரசிகர்கள் மத்தியிலும் செம ரெஸ்பான்ஸ் என்றிருந்த இவருக்கு, இடையில் என்ன ஆனது என்று தெரியவில்லை. கொஞ்ச நாட்களாக, இவருக்கும் , இவரைப்போலவே திரையுலகில் முன்னனி ஹீரோவாக வளர்ந்து வரும் சிவகார்த்திகேயனுக்கும் ஏதோ ஒரு காரணத்தால் முட்டிக்கொண்டது. அதன் பிறகு, அருண்விஜய் தனது மகனுடன் இணைந்த நடித்த ஓ மை காட் படத்திற்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து தெரிவிக்க, இவர்களுக்குள் இருந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வந்தது. 


தொடர் தோல்வி!


கெத்து வில்லனாக நடித்து, நல்ல ஹீரோ கதைக்கான வாய்ப்பை பிடித்து படிப்படியாக சினிமாவில் உயர்ந்து வந்த அருண் விஜய்யின் பயணத்தில் மீண்டும் சறுக்கல்கள் நிகழத்தொடங்கின. துருவங்கள் 16 புகழ் கார்த்திக் நரேன் இயக்கிய மாஃபிய படம் ரசிகர்களை பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது.


Also Read|Ponniyin Selvan 2nd Single: வெற்றி கொண்டாட்டத்தில் ஆதித்த கரிகாலன்... பொன்னியின் செல்வனின் அடுத்த அப்டேட்..!


 






ஒரு வேளை இருக்குமோ?


சமீபத்தில் வெளியான யானை படத்திம், பெரிதாக பேசப்படவில்லையென்றாலும், விமர்சனம் மற்றும் வசூலில், சினிமா ரசிகர்கள் மத்தியில் ‘ஓகே’ வாங்கியது. இருப்பினும், அருண் விஜய் முன்னர் கொடுத்தது போல் நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்ற ஆதங்கம் அவரது ரசிகர்களிடம் இருந்து வருகிறது. இந்த ஆதங்கத்திற்கு மருந்து போடும் வகையில் அருண் விஜய் கருப்பு நிற கோட் ஸூட்டில், க்ளாஸாக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இது, மீண்டும் நல்ல பட வாய்ப்புகளை பிடிக்க அருண் விஜய் எடுத்துள்ள முயற்சியாக இருக்கும் என கோலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.