தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகராக அறியப்படுபவர் நடிகர் அருண் விஜய். இவரது நடிப்பில் வெளியீட்டிற்கு தயாராக இருக்கும் திரைப்படம் பாடர். இந்த படத்தை அறிவழகன் இயக்கியுள்ளார். படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெஃபி படேல் ஆகியோர் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். இந்த படத்தில் டிரைலர் மற்றும் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படம் வருகிற நவம்பர் 19 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில் பாடர் படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜசேகரின் தந்தை கடந்த 18-ஆம் தேதி உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். அந்த நிகழ்வில் பங்கேற்ற நடிகர் அருண் விஜய் , ராஜசேகருக்கு நேரில் ஆறுதல் கூறியதோடு இறுதிச்சடங்கு முடியும் வரை ராஜசேகருக்கு ஆறுதலாக இருந்துள்ளார். இது குறித்த புகைப்படங்களை ராஜசேகர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து , அருண் விஜய்க்கு நன்றி தெரிவித்துள்ளார்.
அருண் விஜய் வாரிசு நடிகராக இருந்தாலும் தனக்கான அங்கீகாரத்திற்காக தொடர்ந்து போராடி வருகிறார். தற்போது ஹரி இயக்கத்தில் 'யானை’ என்னும் படத்தில் கிராமத்து இளைஞராக நடித்து வருகிறார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது அப்போது பாண்டிச்சேரியை சேர்ந்த அருண் விஜய் ரசிகர்கள் சிலர், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை கடலுக்கடியில் வித்தியாசமான முறையில் வெளியிட்டனர். அதே போல நாமக்கல் மாவட்ட அருண் விஜய் ரசிகர்கள் யானை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கு பால் அபிஷேகம் செய்து, கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இது தற்போது வைரலாக பரவி வருகிறது.
இதேபோல அருண் விஜய் ரசிகர்கள் சிலர் பாடர் படத்தின் டிரைலர் வெளியானதை தொடர்ந்து , அந்த படம் வெற்றியடைய வேண்டும் என அன்னதானம் வழங்கியுள்ளனர். இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த அருண் விஜய் அவர்களுக்கு நன்றி தெரிவித்திருந்தார்.