Demonty Colony 2: ரசிகர்களை அச்சுறுத்தும் அருள்நிதி! டிமான்டி காலனி எப்போது ரிலீஸ் தெரியுமா?
அருள்நிதி நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள டிமான்டி காலனி 2ம் பாகம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாக உள்ளது.

தமிழ் திரையுலகில் பேய் படங்களுக்கு என்று எப்போதும் தனி இடம் உண்டு. அந்த வகையில் 2015ம் ஆண்டு வெளியான டிமான்டி காலனி படத்திற்கு என்று தமிழ் சினிமாவில் தனி இடம் உண்டு. அஜய் ஞானமுத்து இயக்குனராக அறிமுகமான அந்த படம் நடிகர் அருள்நிதி திரைவாழ்க்கையில் மறக்க முடியாத வெற்றிப்படமாக அமைந்தது.
டிமான்டி காலனி 2ம் பாகம்:
அருள்நிதி மற்றும் அஜய் ஞானமுத்து இருவரது திரை வாழ்க்கையிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைத் தந்தது. இதையடுத்து, இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அஜய் ஞானமுத்துவிற்கு கோப்ரா படம் தோல்விப்படமாக அமைந்தது.
Just In




இந்த நிலையில், அஜய் ஞானமுத்து மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப டிமான்டி காலனியையே கையில் எடுத்தார். முதல் பாகத்தின் நாயகனான அருள்நிதியையே கதாநாயகனாக வைத்து தற்போது டிமான்டி காலனி இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளார். இந்த படத்திற்கான அறிவிப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு எழுந்து வந்த நிலையில், தற்போது டிமான்டி காலனி படம் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின வெளியீடு:
வரும் ஆகஸ்ட் 15ம் தேதி டிமான்டி காலனி படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. சுதந்திர தின கொண்டாட்டமாக டிமான்டி காலனி 2ம் பாகம் வெளியாக இருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கியுள்ள இந்த படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் வெளியிட உள்ளனர். இந்த படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.
இந்த படத்தில் அருள்நிதியுடன் சேர்ந்து அருண் பாண்டியன், பிரியா பவானிசங்கர், மீனாட்சி கோவிந்தராஜன், பிக்பாஸ் புகழ் அர்ச்சனா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். முதல் பாகத்துடன் தொடர்புள்ள வகையில் இந்த படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகத்தில் வில்லனாக நடித்து அசத்திய அன்டி ஜாஸ்கெலெய்னென் இந்த படத்திலும் நடித்துள்ளார்.
ஏற்கனவே டிமான்டி காலனி 2ம் பாகத்தின் ட்ரெயிலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்தது. இந்த படம் அருள்நிதிக்கும், அஜய் ஞானமுத்துவிற்கும் ஒரு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.