பிரபாஸ்
இந்தி , தமிழ் , தெலுங்கு என மூன்று மொழிகளிலும் தனக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருக்கிறார் நடிகர் பிரபாஸ். பான் இந்திய நடிகர் என்கிற வார்த்தைக்கு தற்போதைய சூழலில் மிகப் பொருத்தமான ஆள் என்று இவரைச் சொல்லலாம். சமீபத்தில் பிரபாஸ் நடித்த கல்கி படம் உலகளவில் 1000 கோடி வசூலித்தது. ரசிகர்களால் கொண்டாடப்படும் பிரபாஸை பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வார்ஸி ஜோக்கர் என்று கூறிய கருத்து சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரபாஸ் ஜோக்கர் மாதிரி இருக்கிறார்
இந்தியில் கோல்மால் , ஜாலி எல்.எல்.பி ஆகிய படங்களில் நடித்தவர் அர்ஷத் வார்ஸி. ஜாலி எல்.எல்.பி படம் தமிழிம் மனிதன் என்கிற டைட்டிலில் ரீமேக் செய்யப்பட்டது. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய அர்ஷத் வார்ஸி தான் கல்கி படம் பார்த்ததாகவும் அதில் பிரபாஸின் கதாபாத்திரம் ஜோக்கர் மாதிரி இருந்ததாகவும் தெரிவித்திருந்தா. தான் மேட் மேக்ஸ் மாதிரியான ஒரு படத்தை பார்க்க நினைத்ததாகவும் பிரபாஸின் கதாபாத்திரத்தை இப்படி ஆக்கிவிட்டார்களே என்று அவர் தெரிவித்திருந்தார். அவரது இந்த கருத்து பிரபாஸ் ரசிகர்களை சீண்டிவிட்டது. விளைவாக சமூக வலைதளங்களில் அவரை விமர்சித்து பல்வேறு பதிவுகள் பகிரப்பட்டன. ரசிகர்கள் மட்டுமில்லாமல் முன்னணி தெலுங்கு பிரபலங்களும் தங்கள் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
பிரபாஸூக்கு நானி ஆதரவு
அர்ஷத் வார்ஸியின் கருத்திற்கு நடிகர் நானி தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். நானி நடித்துள்ள சரிபோதா சனிவாரம் படத்தின் ப்ரோமோஷனின் போது அவர் அர்ஷத் வார்ஸியின் கருத்திற்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார். அர்ஷத் வார்ஸி பப்ளிசிட்டிக்காக இந்த மாதிரியான கருத்துக்களை கூறியுள்ளார் என்று நானி கூறினார். மேலும் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் அர்ஷத் வார்ஸியின் மார்கெட் சரிந்துவிட்டதாகவும் அதனால் கவனத்தை ஈர்க்க அவர் இந்த மாதிரியான கருத்துக்களை தெரிவித்துள்ளார் என்றும் கூறி வருகிறார்கள்.