விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் இறுதி போட்டி 19ஆம் தேதி நடைபெற்றது. 105 நாட்கள் நடந்த பிக் பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக முத்துக்குமரன் அறிவிக்கப்பட்டார். அவருக்கு டிராபியோடு 40 லட்சத்து 50 ஆயிரம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது. சௌந்தர்யா 2ஆவது இடம் பிடித்தார். இந்த நிலையில் தான் செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் சமூக வலைதளங்களில் லைவ்வில் ஏன் பிக் பாஸ் செல்லவில்லை என எழுபட்ட கேள்விக்கு பதிலளித்துள்ளார்.


பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மாட்டேன். ஏனென்றால் எனக்கு குட்டி மகள் இருக்கிறார். ஒரு குழந்தையை வைத்து கொண்டு, என்னால் எப்படி பிக் பாஸ் வீட்டிற்குள் போக முடியும். குழந்தையை வச்சுக்கிட்டு ஷூட்டிங்கே போக முடியவில்லை. சூட்டிங் போயிட்டு வந்துவிட்டாலே அதிகம் தேடுகிறாள். சீரியலில் கதாநாயகியக நடித்து வருவதால், அதில் இருந்து பாதியில் விலகவும் முடியாது என்று கூறியுள்ளார்.


அதே நேரம், என்னை அர்னவ்வின் முன்னாள் மனைவி என்று சில ஊடகங்கள் கூறுகின்றனர். எனக்கும் அர்னவ்விற்கும் இன்னும் முறைப்படி விவாகரத்து ஆகவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் தனித்தனியாக வாழ்ந்து வருகிறோம். ஆனால் விவாகரத்து ஆகிவிட்டது போல் செய்திகளில் கூறு வருகிறார்கள் என விளக்கம் கொடுத்துள்ளார். 


கடந்த 2 வருடங்களுக்கு முன் அர்னவ் தன்னை ஏமாற்றுவதாகவும், அன்ஷிதாவுடன் பழகி வருவதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.  கர்ப்பமாக இருக்கும் தன்னை தனது கணவர் அர்னவ் துன்புறுத்திறார் என போலீசில் இவர் புகார் கொடுத்ததும், இதை தொடர்ந்து அன்ஷிதா, திவ்யாவை திட்டியது போல் வெளியான வீடியோக்கள் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.