ஆக்ஷன் கிங் என தென்னிந்திய சினிமா மக்களால் கொண்டாடப்படும் நடிகர் அர்ஜுன் இன்றும் அதே பிட்னெஸுடன் முன்னணி நடிகர்களுக்கு இணையான ஒரு நடிகராக டஃப் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான லியோ படத்தில் கூட வெறித்தனமான வில்லனாக கலக்கி இருந்தார் நடிகர் அர்ஜுன். இன்று தனித்துவமான வில்லனாக நடிக்கும் அர்ஜுன் அவர் படங்களில் வில்லன்களாக இருந்த ஸ்டார் நடிகர்களை பற்றி சில ஸ்வாரஸ்யமான அனுபவங்களை சமீபத்தில் நடைபெற்ற நேர்காணல்  ஒன்றில் பகிர்ந்து இருந்தார். 

Continues below advertisement

 

Continues below advertisement

ரகுவரன் :

முதல்வன் படத்தில் அர்ஜுனுக்கு வில்லனாக முதல்வன் கேரக்டரில் அரங்கநாதன் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் ரகுவரன். முதல்வரை பேட்டி எடுக்கும் ஒரு செய்தியாளராக அர்ஜுன் நடித்த காட்சி படத்தின் ஹைலைட். அந்த காட்சியில் இருவருமே வெகு சிறப்பாக நடித்திருப்பார்கள். அந்த காட்சி குறித்து அர்ஜுன் ஒரு அழகான மெமரிஸ் பகிர்ந்து இருந்தார். 

”பொதுவாகவே செட்டில் மட்டுமே ரகுவரன் கலகலப்பாக பேசுவார். போன் செய்து பேசும் பழக்கம் எல்லாம் அவரிடம் கிடையாது. ஆனால் அந்த இன்டெர்வியூ காட்சியின் ஷூட்டிங் முடிந்த பிறகு அன்று இரவு ரகுவரன் எனக்கு போன் செய்து அந்த ஷாட்டில் நீ ரொம்ப அருமையா நடிச்சு இருந்த. என்னால இதை சொல்லாமல் இருக்கவே முடியவில்லை. சின்ன சின்ன எமோஷ்ன்ஸ் கூட ரொம்ப அழகா இருந்துது என பாராட்டினார். அவரே மிக சிறந்த நடிகர். அப்படி இருக்கும் போது அவரிடம் இருந்து அந்த பாராட்டு கிடைத்தது எனக்கு மிக பெரிய காம்ப்ளிமென்ட்டாக இருந்துது. 

பிரகாஷ்ராஜ் :

மிகவும் அருமையான வெர்ஸிடைல் நடிகர். எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை மிக சிறப்பாக நடிக்க கூடியவர். அவரின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே எனக்கு தெரியும்.

 

நாசர் :

அண்ணனாக, அப்பாவாக, வில்லனாக நானும் அவரும் பல காம்பினேஷனில் பல படங்களில் ஒன்றாக ஒர்க் செய்துள்ளோம். எங்க இரண்டு பேருக்கும் நல்லா செட்டாகும். மிகவும் நல்ல மனிதர்.

மன்சூர் அலிகான் : 

நானும் அவரும் சேர்ந்து இரண்டு படங்களில் நடித்துள்ளோம். அவரும் மிக சிறந்த நடிகர். 

பொன்னம்பலம் :

பொன்னம்பலம் ஒரு ஃபைட்டராக அறிமுகமான போதில் இருந்தே எனக்கு தெரியும். மிகவும் கடுமையான உழைப்பாளி. ரொம்ப கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து பின்னர் நடிகரானார். அதற்கு பிறகு ஒரு நடிகராக வெற்றிபெற்றவர்” என தனது அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.