கடந்த 2004 ஆம் ஆண்டு சுந்தர்.சி இயக்கம் மற்றும் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கிரி. இந்த படத்தில் அர்ஜூன். ரீமாசென் , தேவையானி, வடிவேலு , பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே நடித்திருந்தனர். அந்த படத்தில் இடம்பெற்ற பேக்கரி காமெடியை இன்றைக்கும் பார்த்து பலர் குலுங்கி குலுங்கி சிரிப்பார்கள்.  தன் அக்காவை வைத்துதான் இந்த பேக்கரியை வாங்கி்யதாக வடிவேலு அர்ஜூனிடம் ஷேர் செய்ய, அடுத்த நாள் பக்கத்து வீட்டுக்காரர் பல் துலக்கியவாரே அது உண்மையா சொல்லு , எனக்கு வேலை இருக்கு என கேட்பார். சிலர் இதெல்லாம் காமெடியா என விமர்சமனமும் செய்வார்கள். சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய் சுந்தர்.சி , அந்த  காமெடி உருவான விதம் குறித்து பகிரந்திருந்தார்.


வட இந்தியரை பக்கத்து வீட்டுக்காரராக நடிக்க வைத்ததாகவும் , டப்பிங்கில் தனக்கு திருப்தி இல்லையென்றும் கூறினார். பின்னர் புகழ்பெற்ற நடிகர் நெல்லை சிவா  டப்பிங் கொடுப்பதற்காக வெளியில் காத்திருக்கும்பொழுது சத்தமாக பேசிக்கொண்டிருந்திருக்கிறார். அவரை அழைத்த சுந்தர்.சி டப்பிங் பேச சொன்னாராம். அதன்  பிறகுதான் எல்லோரும் சிரித்தார்கள் என்றார்.







சரி எப்படித்தான் கணபதி ஐயர் விஷயம் வெளியே கசிந்தது என்பது இன்றைக்கும் பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இது குறித்து பதிலளித்த அர்ஜூன் “ எல்லாரும் என்கிட்ட இதே கேள்வியைத்தான் கேட்கிறாங்க. ஆமா அன்னைக்கு நீங்க தூங்கிட்டுதானே இருந்தீங்க எப்படி, மற்றவர்களுக்கெல்லாம் தெரிந்தது என்று. ஆனால் எனக்கும் அது தெரியலை .





சுந்தர்.சி ஐத்தான் கேட்கணும்.. சுந்தர்.சி நகைச்சுவை படங்களை எடுப்பதில் கில்லாடி. அந்த படத்துல ஏய் கைய வச்சுக்கிட்டு சும்மா இருடானு ஒரு பாடல் வரும். அதில் நடிக்க முதலில் யோசித்தேன். சுந்தர்.சிதான் அந்த வரிகள் குறித்து விளக்கி என்னை நடிக்க வைத்தார். பொது இடங்களில் இப்படியான ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க எனக்கு கூச்சமாக இருக்கும்“ என்றார் அர்ஜூன்