அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானாவர் ஷாலினி பாண்டே. முதல் படத்தில் விஜய் தேவரகொண்டாக்கு ஜோடியாக நடித்து அனைவரது மனதையும் கவர்ந்தவர். தொடர்ந்து தமிழ் உள்பட பல மொழிகளிலும் நடித்து வருகிறார். 


தமிழில் ஜீவா நடிப்பில் வெளியான கொரில்லா, ஜிவி பிரகாஷுடன் 100% காதல் படத்தில் ஷாலினி நடித்து இருந்தாலும் அந்த பெரிதாக கைகொடுக்க வில்லை. இருப்பினும் இவருக்கும் தமிழிலும் நல்ல ரசிகர்கள் பட்டாளம் உண்டு. தற்போது இவர் ஹிந்தியில் ரன்வீர் சிங் ஜோடியாக "ஜெயேஷ்பாய் ஜோர்தார்" என்ற படத்தில் நடித்து இருக்கிறார். அந்த படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று நடந்தது.






அந்த ட்ரைலர் வெளியீட்டு விழாவில் பேசிய ஷாலினி பாண்டே, தான் எப்படி சினிமாவிற்குள் வந்தேன் என்பது குறித்து மனம் திறந்துள்ளார். அப்பா நான் இஞ்சினியரிங் படிக்கவேண்டும் ரொம்ப ஆசைப்பட்டார். அவருக்காக படிக்க தொடங்கினேன். ஒருகட்டத்தில் படிப்பு எனக்கு திருப்தி அளிக்கவில்லை, இது எனக்கானதல்ல என உணர்ந்து நடிகையாக வேண்டும் என்று நான்கு வருடங்களாக அப்பாவை மாற்ற முயற்சி செய்தேன். ஆனால் கடைசி வரை அது முடியவில்லை.


" வேறு வழியில்லாமல் நடிப்புக்காக வீட்டை விட்டு ஓடிவந்துவிட்டேன். தற்போது என் பெற்றோர் என்னை பற்றி பெருமையாக நினைப்பார்கள்" என்று நினைக்கிறேன் என பேசியுள்ளார். 






மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண