பிரபல நடிகை சோனம் கபூருக்குக்காக அவரது உறவினர் மற்றும் நடிகர் அர்ஜூன் கபூர் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்!


பாலிவுட் நடிகை சோனம் கபூர்:


பாலிவுட் திரையிலகின் பிரபல நடிகை சோனம் கபூர். பிரபல நடிகர் அனில் கபூரின் மகளான இவர் சல்மான்கான், அக்சய் குமார், ஆயூஷ் மான் கவுர் உள்ளிட்ட முன்னனி ஹீரோக்களுடன் இணைந்து நடித்துள்ளார். நடிகர் தனுஷ் உடன் இணைந்து நடித்த ராஞ்சனா படம் மூலம் தமிழில் ‘டப்பிங்’ செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இதனால், இவர் தமிழ் மக்களிடையே பிரபலமானார். மேலும், இவரது நடிப்பில் வெளியான ப்ரேம் ரத்தன் தான் பாயோ, பேட்மேன், மை லவ் ஆகிய படங்கள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. கடந்த 2016-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நீரஜா திரைப்படம். உண்மைக் கதையை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் நீரஜாவாக நடித்த சோனம், மிக அருமையான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பதாக அனைவராலும் பாராட்டப்பட்டார். 


தொடர்ந்து படங்களிலில் நடித்துக்கொண்டிருந்த இவர், கடந்த 2018-ஆம் ஆண்டு ஆனந்த அவுஜா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், கடந்த மாதம் 20-ந்தேதி அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்த செய்தியை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துகொண்ட அவருக்கு பலர் வாழ்த்து தெரிவித்தனர். 


காஃபி வித் கரண்:


ஹிந்தியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சி காஃபி வித் கரண். தயாரிப்பாளரும் இயக்குனருமான கரண் இந்நிகழ்ச்சியில் பல ஆண்டுகளாக தொகுப்பாளராக உள்ளார். ஏழு சீசனை கடந்த சென்று கொண்டிருக்கும் இதில், கிரிக்கெட் வீரர்கள், நடிகர்கள் என பல செலிப்ரிட்டிக்களை கரண் நேர்காணல் எடுப்பது வழக்கம். இதில் சோனம் கபூர் மற்றும் நடிகர் அர்ஜூன் கபூர் கலந்து கொண்ட நிகழ்ச்சியும் இடம் பெற்றது. இதில் குழந்தை பிறப்பதற்கு முன் சோனம் கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியின் போது சோனம் கபூருடன் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்  அர்ஜூன் கபூர். மேலும், சோனம் தாய் ஆனது குறித்தும் அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். 






இந்த பதிவிற்கு செலிப்ரிட்டிகள், ரசிகர்கள் என அனைவரும் லைக்ஸ்களையும் கமென்ட்ஸ்களையும் தெரிக்கவிட்டு வருகின்றனர்.  இவர்களது புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.