பாலிவுட் திரையிலகில் திரைமைமிகு நட்சத்திரங்ளுள் ஒருவராக விளங்கும் அர்ஜுன் கபூர். இவரும், சக பாலிவுட் நட்சத்திரமான மலைகா அரோராவும் காதலித்து வருகின்றனர். இந்த நிலையில், மலைகா அரோரா கர்பமாக உள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது. இதற்கு, நடிகர் அர்ஜுன் கபூர் காட்டமான பதில் ஒன்றை இன்ஸ்டாகிராம் ஸ்டோரி பதிவாக வெளியிட்டுள்ளார்.

Continues below advertisement

அர்ஜுன் கபூர்-மலைகா அரோரா காதல்:

பிரபல தயாரிப்பாளர் போனி கபூர்-மோனா ஷோரி கபூரின் மகன் அர்ஜுன் கபூர். 2003 ஆம் ஆண்டில் திரையுலகிற்கு வந்த இவர், 2 ஸ்டேட்ஸ், ஹாஃப் கேர்ள் பிரண்ட், குண்டாய் உள்ளிட்ட பிரபலமான படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமன்றி, இன்று பாலிவுட்டின் முன்னணி நடிகர்களாக இருக்கும் பிரியங்கா சோப்ரா, ஆலியா பட், தீபிகா படுகோனே உள்ளிட்டோர் நடித்துள்ள படங்களிலும் முக்கிய கதாப்பாத்திரமாக நடித்துள்ளார். இவரது காதலியான மலைகா அரோரா, ஷாருகான், சல்மான் கான், அக்ஷய் குமார் உள்ளிட்டோருடன் சேர்ந்து நடித்தவர். 1998ஆம் ஆண்டு பாலிவுட் நடிகர் அர்பாஸ் கானை கரம் பிடித்த இவர், 2017ஆம் ஆண்டு அவரிடமிருந்து விவாகரத்து பெற்றார். இவர்களுக்கு அர்ஹான் கான் என்ற மகன் உள்ளார். 

Continues below advertisement

மலைகா அரோராவும், அர்ஜுன் கபூரும் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் காதலித்து வருகின்றனர். இவர்கள் இருவரும் தங்களது காதல் குறித்து எந்த பொது வெளியிலும் பேசுவதில்லை. ஆதலால் இவர்கள் குறித்து  அவ்வப்போது சில வததந்திகள் பரவிய வண்ணம் உள்ளன. சில நாட்களுக்கு முன்னர், அர்ஜுன் கபூருக்கும் மலைகாவிற்கும் நிச்சயதார்த்தம் நடந்து விட்டதாகவும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் தகவல் பரவியது. இதே போல நேற்றும் புதிதாக ஒரு செய்தி பரவியது.

மலைகா அரோரா கர்பம்?

சமூக வலைதளம் முழுவதும் நேற்று பரவி வந்த தகவலின் படி மலைகாவும் அர்ஜுனும் தற்போது லன்டனிற்கு சென்றுள்ளதாகவும், அங்கே அவர்களது நெருங்கிய நண்பர்களை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமன்றி, தங்களது நண்பர்களிடத்தில் மலைகா கர்பாக உள்ள செய்தியை அவர்கள் அறிவித்ததாகவும் தகவல்கள் பரவியது.

தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள  அர்ஜுன் கபூர், இது குறித்த காட்டமாக எழுதியிருந்தார். அப்பதிவில் தனியார் பத்திரிகை நிறுவனம் ஒன்றை டேக் செய்துள்ள அவர், “நீங்கள் செய்ததிலேயே இதுதான் மிகவும் கீழ்தரமான செயல். நாங்கள் இது போன்ற பொய்யான செய்திகளை கண்டு கொள்ளவில்லை என்பதால், இந்த பத்திரிக்கையாளர்(அந்த செய்தியை எழுதிய நபர்) எங்களைக் குறித்து அவதூறு பரப்பும் வகையிலான விஷயங்களை எழுதி வருகிறார். எங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இது போன்று விளையாடாதீர்கள்” என்று குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, அந்த செய்தி குறிப்பிடப்பட்டிருந்த தளத்திலிருந்து நீக்கப்பட்டு, அந்த வதந்திக்கும் ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நடிகர் அர்ஜுன் கபூர் மீண்டும் ஒரு இன்ஸ்டா பதிவை வெளியிட்டுள்ளார். 

“கர்மா யாரையும் சும்மா விடாது..”

அர்ஜுன் கபூரின் முந்தைய இன்ஸ்டா பதிவு வைரலானதைப் போல, அவர் கர்மா குறித்து பகிர்ந்துள்ள பதிவும் இணையவாசிகளால் பெரிதும் பகிரப்பட்டு வருகிறது. அர்ஜுன் தனது இன்ஸ்டா பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “கர்மா யாரையும் சும்மா விடாது. உங்கள் வாழ்க்கை முழுவதும் மற்றவரை காயப்படுத்தினால், நீங்கள் கர்மாவின் இடத்திலிருந்து கண்டிப்பாக தப்பிக்க முடியாது. நீங்கள் யாராக வேண்டுமானாலும் இருந்து கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்தீர்களோ அதற்கான தண்டனையை விரைவாகவோ அல்லது தாமதமாகவோ உங்களுக்கு கிடைத்தே தீரும்” இவ்வாறாக நடிகர் அர்ஜுன் கபூர் மிகவும் கோபமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அர்ஜுனின் பதிவுகளையெல்லாம், அவரது காதலி மலைகா அரோராவும் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ரீ-ஷேர் செய்துள்ளார்.