தமிழ் சினிமாவின் உச்சபட்ச நட்சத்திரம் நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக இறங்குவதற்கு முன்னர் வெளியாக இருக்கும் படம் 'தி கோட்' என்பதால் திரை ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு என்பது இதுவரையில் விஜய் படங்களுக்கு இருந்ததை காட்டிலும் பல மடங்காக எகிறி வருகிறது.

Continues below advertisement

தி கோட்:

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் தளபதி 68 திரைப்படம் மிகவும் மும்மரமாக தயாராகி வருகிறது. இப்படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் தற்போது வெளியாகி ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. 

 

Continues below advertisement

நடிகர் விஜய் உடன் இணைந்து பிரஷாந்த், பிரபு தேவா, அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம், மோகன், வைபவ், பிரேம்ஜி என மிக பெரிய திரை பட்டாளமே நடித்துள்ள 'தி கோட்' திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5ம் தேதி உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சில தினங்களுக்கு முன்னர் தான் இறுதிக்கட்ட படப்பிடிப்பானது நடைபெற்று முடிந்தது என தகவல்கள் தெரிவிக்கின்றன.  

 

'தி கோட்' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'விசில் போடு...' மற்றும் இரண்டாவது சிங்கிளாக 'சின்ன சின்ன கண்கள்...' பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங்கானது. அதை தொடர்ந்து மூன்றாவது பாடல் எப்போது வெளியாகும் என ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.

 

 

கடந்த ஜூலை மாதம் முழுவதும் 'தி கோட்' படம் பற்றின எந்த ஒரு அப்டேட்டும் வெளியாகவில்லை மற்றும் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பு உள்ளது என வதந்திகள் பரவி வந்ததால் மிகுந்த மனவருத்தத்தில் இருந்த ரசிகர்களின் தொடர் கேள்விகளுக்கு எனர்ஜி அளிக்கும் விதமாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய எக்ஸ் தள பக்கம் மூலம் சர்ப்ரைஸ் அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார்.

அதாவது ஆகஸ்ட் 1ம் தேதி 'தி கோட்' அப்டேட் ஒன்று வெளியாகும் என பதில் அளித்துள்ளார். ஒருவேளை அது மூன்றாவது சிங்கிள் பற்றின அப்டேட்டாக இருக்கும் என ரசிகர்கள் யூகிக்கிறார்கள். இன்னும் இரு தினங்களில் 'தி கோட்' குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.