அறந்தாங்கி நிஷா என்றால் பலருக்கு அறிமுகம் தேவையில்லை. கிராமத்து பெண்களுக்கு இயல்பாகவே நகைச்சுவை குணம் ததும்பி வழியும் என்றாலும் கூட , அதனை பொதுமேடையில் ஆண்களுக்கு நிகராக வெளிப்படுத்தும் பெண்களை விரல் விட்டு எண்ணி விடலாம். பெண்களும் ஸ்டாண்ட் அப் காமெடி செய்வார்கள் என ஸ்டீரியோ டைப்பை உடைத்த நிஷா ,ஆரம்ப நாட்களில் எதிர்கொண்ட ரேஸிசம் நிறைந்த சவால்கள் அதிகம் . ஆனாலும் தன் திறமை மேலும் கடின உழைப்பு மீதும் கொண்ட அசைக்க முடியாத நம்பிக்கை காரணமாக இன்று பல உச்சங்களை கண்டுள்ளார் நிஷா. ஸ்டாண்டப் காமெடி , விஜய் டிவி போட்டியாளர் , பிக்பாஸ் போட்டியாளர் , நிகழ்ச்சி தொகுப்பாளர் , திரைப்பட நடிகை என பன்முக அவதாரம் எடுத்து வரும் நிஷா சமூக வலைத்தளங்களிலும் செம ஆக்டிவ்.
சமீபத்தில் ஹிஜாப் விவகாரம் சர்ச்சையான பொழுது , அது தங்களுக்கான உரிமை என அழகான கவிதை நடை வரிகளால் பதிலடி கொடுத்திருந்தார். நிஷா பதிவிடும் புகைப்படங்களுக்கு கீழே அவர் மதம் சார்ந்த கேள்விகள் அதிகமாக கேட்கப்படுவது வழக்கம்தான். இந்த நிலையில் சமீபத்தில் நடைப்பெற்ற உள்ளாட்சி வாக்குப்பதிவில் ஓட்டுப்போட்டு தனது ஜனநாயக கடைமையை ஆற்றினார் நிஷா. அது குறித்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட் அவர்,”நம்ம கடமைய என் சொந்த ஊரு அறந்தாங்கியில் முடிச்சாச்சு....” என கேப்ஷன் போட்டிருந்தார். அதற்கு கீழே கமெண்ட் செய்த நெட்டிசன்கள் “நாங்கள் மொபைல்போனை எடுத்துச்சென்றால் மட்டும் அனுமதிக்க மாட்டார்கள். உங்களை மட்டும் எப்படி ஃபோட்டோ எடுக்க அனுமதிக்கிறார்கள் ?” , “ நீங்க முஸ்லீம்தானே ஏன் ஹிஜாப் போடமாட்டிங்களா ?”, “ நிஷானு பெயர் வைத்திருக்கிறீர்களே நீங்கள் முஸ்லீம்தானா ?” என பல கேள்விகளை கேட்க. அதில் ஹிஜாப் கேள்விக்கு மட்டும் நிஷா பதில் கொடுத்துள்ளார். நான் ஹிஜாப் போடுவேன். ஆனால் அந்த புகைப்படங்களை பதிவிட மாட்டேன்“ என தெரிவித்துள்ளார்