தனது ஆன் தி ஸ்பாட் கலகல காமெடிகளுக்காகப் பெயர்போனவர் ஒன் வுமன் காமெடி ஆர்மி அறந்தாங்கி நிஷா.மாரி, கலகலப்பு என படு பிசியாக காமெடியில் புகுந்து கலக்கிய அவர் நடிகர் தனுஷ் உடனான தனது நட்பைப் பற்றி பகிர்ந்த பழைய வீடியோ நேர்காணலின் ஒரு பகுதி...




"டிவியில் வெள்ளையா இருக்கிங்க..நேர்ல கலர் கம்மியா இருக்கிங்கனு கேட்கறாங்க. என்னைப் பார்த்து கேலி செய்வதால் சந்தோஷப்படறாங்களா? இருந்துட்டு போகட்டும்னு விட்டுருவேன்.நான் நெகட்டிவ் கலர்ல இருக்கேன். பாசிட்டிவ்வா இருக்கறதுல ஒன்னும் தப்பில்லையே" என்கிறார் நிஷா.


இடைமறிக்கும் நெறியாளர், “அப்படி நெகட்டிவிட்டியவே பாசிட்டிவாக்கி ஜெயித்த இன்னொரு மனிதர் இருக்கார்.அவர்தான் தனுஷ். அவருடன் செல்ஃபி எல்லாம் எடுத்திங்களே..நீங்கதான் அடுத்த தனுஷ் படத்துல ஹீரோயினாம்” எனக் கலாயாகக் கேட்கவும் (அது மாரி-2 படம் ரிலீஸான சமயம்)






”தனுஷுக்கு தெரிஞ்சா என்னை மாரி படத்துலேர்ந்து தூக்கிருவாருடா. உண்மைய சொல்லணும்னா தனுஷ் பழக ரொம்ப இயல்பான மனிதர். நான் நடித்த மேடை நாடகங்கள் பற்றியெல்லாம் குறிப்பிட்டு பேசினார். அவ்வளவு பெரிய நடிகர் அதையெல்லாம் குறிப்பிட்டுப் பேசுவதே பெரிய விஷயம். அவர் படத்தில் சாய் பல்லவியின் தோழியாக நடித்தேன்.அடுத்து கலகலப்பு படத்தில் சுந்தர் சி எனக்கு நல்ல வாய்ப்பைக் கொடுத்தார்.ஒரு நல்ல காமெடியனை ஒன்றிரண்டு காட்சிகளில் மட்டும் பயன்படுத்த விருப்பமில்லை என்று அவர் சொன்னார்”. இவ்வாறு அந்த பேட்டி தொடர்கிறது.