சுந்தர் .சி இயக்கத்தில் ஆர்யா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால், ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள  திரைப்படம் ‘அரண்மனை 3’. இந்த படத்தை குஷ்பு மற்றும் சுந்தர் .சி தயாரிக்கின்றனர். படத்தின் ஃபஸ்ட்லுக் மற்றும் முதல் சிங்கிள் டிராக் சமீபத்தில் வெளியான நிலையில், தற்போது இரண்டாவது சிங்கிள் பாடல் வெளியாகியுள்ளது. பாடலை சித்ஸ்ரீராம் பாடியுள்ளார். சி.சத்யா இசையமைத்துள்ளார். “ரசவாச்சியே ”என தொடங்கும் அந்த பாடலை மோகன் ராஜன் எழுதியுள்ளார். இந்த பாடல் தற்போது யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.



 



பாடல் வரிகள் :


ரசவாச்சியே
ரசவாச்சியே
உன் பார்வையால போனேன் கூசியே


விழி சாய்ச்சியே
விழி சாய்ச்சியே
நீ பேசும் போது ஆவேன் தூசியே


பாவாட சட்டையில நான் பாத்த நேரம் எல்லாம்
பாலாட பால போல தழும்புவேன்டி


நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நெனைக்குறேன்டி


ரசவாச்சியே விழி சாய்ச்சியே ரசவாச்சியே



ஆளான நேரத்தில்
வெட்கப்படும் உன் கண்ணு
அந்த நேரம் நீ போட்ட உன் வளையல் ஆளி சேர்த்தேன்


தெனம் காலாற உன்கூட
சேர்ந்து வர நெனப்பேனே
அப்போயெல்லாம் உன் நிழலில் என் நிழலை
தொட்டு பாப்பேன் …


ஒரு ரிப்பன் போல தான் சுத்தி கெடக்குறேன் உன் மேல நானே
நீ பாரு அது போதும் நான் வாழுவேன்


ரசவாச்சியே ரசவாச்சியே விழிசாய்ச்சியே


பாவாட சட்டையில நான் பாத்த நேரம் எல்லாம்
பாலாட பால போல தழும்புவேன்டி


நீ கடிச்ச மிட்டாய் வாங்கி நான் ருசிச்ச காலம் எல்லாம்
நெஞ்சோரம் இன்னும் கூட நெனைக்குறேன்டி


ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே ரசவாச்சியே
ரசவாச்சியே விழி சாய்ச்சியே


 


 




அரண்மனை படத்தின் இறுதிக்கட்ட வேலைகள் நிறைவடைந்து தற்போது வெளியீட்டிற்கு தயாரக உள்ளது.படம் திரையரங்கில் முக்கியமான நாளில் வெளியாகி சில படங்களுடன் பந்தையத்தில் பங்கேற்குமா அல்லது ஒடிடியில் ரிலீஸாகுமா என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்தில் ஆர்யா, ஆண்ட்ரியா , ராஷி கண்ணா தவிர  மறைந்த காமெடி ஜாம்பவான் விவேக்கும் நடித்துள்ளார்.  மேலும் யோகி பாபு, மனோபாலா,சம்பத், வின்சென்ட் அசோகன், வேல ராமமூர்த்தி, நளினி உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.கடந்த 2014 ஆம் ஆண்டு அரண்மனை படத்தின் முதல் பாகம் வெளியாகி நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு வெளியான இரண்டாம் பாகமும் மக்கள் மத்தியில் வரவேற்ப்பை பெற்றதால், மூன்றாம் பாகத்தை மிகுந்த நம்பிக்கையுடனும் அதிக பொருட்செலவுடனும் எடுத்திருக்கிறார் சுந்தர்.சி. படம் வெளியீட்டு தேதி குறித்த முழு அறிவிப்பு  டிரைலருடன் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.