கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய துபாய் எக்ஸ்போவுக்கு உலகெங்கிலும் இருந்து பிரபலங்கள், மக்கள் படையெடுத்து வருகின்றனர். அந்த வரிசையில், இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மான் துபாய் எக்ஸ்போவில் எடுத்த செல்ஃபி வீடியோதான் இன்றைய வைரல்! 


துபாய் எக்ஸ்போவில் டிசம்பர் 22ம் தேதி ஏ.ஆர் ரகுமானின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்தியாவின் முன்னணி இசை கலைஞர்கள் பங்கேற்றும் இந்த இசை நிகழ்ச்சிக்காக ரகுமான் துபாய் சென்றிருக்கிறார். அப்போது, துபாய் எக்ஸ்போவில் இந்தியாவின் தீம் கொண்ட வளாகத்தில் எடுத்த செல்ஃபி வீடியோவைதான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். மாஸ்க் அணிந்து கொரோனா விதிமுறைகளை பின்பற்றும் இசைப்புயல், ட்ராம் வண்டியில் உலா வருவதுபோல துபாய் எக்ஸ்போவை காண்பித்தபடி வீடியோவை எடுத்து கொண்டு பயணப்படுகிறார். இந்த வீடியோவை ரகுமான் ரசிகர்கள் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.






துபாய் எக்ஸ்போ நடக்கும் பகுதி மட்டும் சுமார் 1083 ஏக்கர். முதலில் இந்த உலகக் கண்காட்சி 20 அக்டோபர் 2020 முதல் 10 ஏப்ரல் 2021 வரையிலான ஆறு மாத காலத்துக்குத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில் பெருந்தொற்று காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டது.  பின்னர் 1 அக்டோபர் 2021 முதல் 31 மார்ச் 2022 வரையில் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இருந்தும் மார்க்கெட்டிங் சிக்கல்களைக் கருத்தில் கொண்டு எக்ஸ்போ 2020 என்றே பெயரிட்டுள்ளது அமீரகம். 


ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, சீனா, பங்களாதேஷ், க்ரோஷியா,இந்தியா என மொத்தம் 191 நாடுகள் இந்த எக்ஸ்போவில் பங்கேற்றுள்ளன. பங்கேற்றிருக்கும் 191 நாடுகளுக்கும் ஒவ்வொரு தீமில் ஒரு இடம் உருவாக்கப்பட்டுள்ளது. உதாரணத்துக்கு இத்தாலிக்கு மைக்கெலேஞ்சலோ ஓவியங்களைக் கொண்ட நகரம், எகிப்து நாட்டுக் கண்காட்சி நடக்கும் இடத்தில் பாரோ மன்னர்களின் மூன்று ஒரிஜினல் சிலைகள், மொரிஷியஸுக்கு அவர்களது தேசியப் பறவையான டோடோவின் பிரமாண்ட உருவம் பொறித்த தீம் என செட் செய்யப்பட்டுள்ளது.


அந்த வரிசையில், இந்தியாவின் கண்காட்சி அரங்க நுழைவு வாயிலில் பிரமாண்ட காந்தி சிலை வடிவமைக்கப்பட்டு அரங்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது வேறுபட்ட கலை, கலாசாரம், பன்னோக்குச் செயல்பாடுகள் குறித்து அந்த அரங்கத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண